கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம்
செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம்
அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி
உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி
சங்கரன் உதித்தானே காலடியில்
அவன் சகலமும் அறிந்தது உன் காலடியில்
புவனங்கள் தழைப்பது உன் பூவடியில்
என் புத்தியும் லயிப்பது உன் சேவடியில்
ஆதியும் அந்தமும் ஏதுமில்லாதொரு சோதி என்றாகிய சுந்தரியே
பூத கணங்களும் தேவ கணங்களும் ஓதி உணர்ந்திடும் பண்டரியே
ஆய கலைகளும் வேத முறைகளும் பாத மலர் தொழும் சங்கரியே
வாய் உள்ள வரையினில் வாழ்த்தி வணங்கிடும் தாய் உனை எந்தன் சந்ததியே
சந்ததம் உனை பாடும் இச்சையம்மா
அந்த இச்சையும் நீ கொடுத்த பிச்சையம்மா
சிந்தையில் நிலைத்திருக்கும் பக்தியம்மா
எனக்கும் பக்தியல்லால் ஏது சக்தியம்ம்மா
கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம்
செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம்
அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி
உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி
இளையராஜாவின் கீதாஞ்சலி !!!!!
Sunday, 4 September 2016
Wednesday, 10 August 2016
Wednesday, 3 August 2016
சூழல் காப்போம்
கதிரோன் அனல் கக்கிக் காய்கின்ற
வெய்யில் தாங்காமல் கடைசி நீர்துளியின்றி
கண்மாய்கள் கூட வறண்டுவிட்டன ...
கண்ணீர்கூட வரமறுக்கின்றது வற்றிப்போய் ....
கதறல் ஒளி கூட தொண்டையோடு நின்று அடம் பிடிக்கின்றது....
கட்டறுந்துவந்த காளைக்கன்று
கண்ணுக்கெட்டிய வரையிலும்
கழனியெங்கும் பசுமை காணாமல் பரிதவிக்கின்றது .
கள்ளிச் செடிகள்கூட சருகுகளாய் சதைகள் வற்றிப்போய்
கருத்து சுருண்டு முட்கள் கொண்டு முன்னுரை வாசிக்கின்றன ...
கட்டிய மனைவிக்கும் பெற்ற மக்களுக்கும்
கஞ்சி ஊற்றிக் கால்வயிறுகூட நிரப்பக் கூட
கதியற்றுப்போன விவசாயிகள் விரக்தியில் வெறுத்துப்போய் ...
கயிறுகட்டித் தொங்கி உயிர் தொலைக்கின்றனர்....
கடைசி இலைகூட மிச்சம் வைக்காமல் உதிர்த்து கிளைகள் மட்டுமே உள்ள பட்ட மரங்களில்
கலாம் கண்ட வல்லரசுக்கனவு
கலைந்துப்போய் காற்றில் கரைகிறது ...
கர்நாடகத்துக் குடகில் தலைக்காவிரி வழிந்து
கரைபுரண்டு ஓடியதெல்லாம் வீணாய்ப் போன வெறுங்கதைகள்....
கவின்மலையாலாக் கேரளமும் தன்
கரையனைத்துப் பாய்ந்த நீர் சென்ற வாடுமட்டும் தாங்கி ....
கங்கையும் யமுனையும் பிறந்து வரும் இமயத்துக்
கடும் பனிப் பாறைகளும்கூட உருகி உருக்குலைந்துபோய்
கட்டுக் குலைந்துபோன கட்டழகியின் கிழட்டு உடம்பின் சுருக்கங்களாய்
கடும் வெடிப்புப் புரையோடிப்போகின்றது பூமியெங்கும்
கடல்கூட வற்றிப்போய் வேற்று மணல் பாறைகள் மட்டுமே காட்சிக்கு விருந்தாய் ....
கண்ணெதிரே காணும் கானல் நீர் மட்டுமாவது நம்பிக்கை அளிக்குமா என்ன
காரிருள் எதிர்காலம் தொலைப்பதற்கு....?
கணவாய் மட்டும் ஒருவேளை இக்காட்சி இருந்துவிட்டால்
கட்டாயம் வரும் நிம்மதி பெருமூச்சு ...
கனவுகள் நிஜமாகாது ...நீரும் பசுமையும் நீங்காது இந்நிலவுலகைச் சூழ்ந்திருக்க
கரங்கள் கோர்ப்போம் ...நம் சூழல் காப்போம் ...!
Sunday, 29 May 2016
பாலர் பண்பு பயிற்சி முகாம்
சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் ஸ்வாசிகா இயக்கம் இணைந்து நடத்தும் பாலர் பண்பு பயிற்சி முகாம் 20-05-2016 முதல் நடைபெற்று வருகிறது. யோகா, சூரிய நமஸ்காரம்,இசை பாடல்கள் ,விளையாட்டுகள்,அறிவுக்கூர்மை பயிற்சிகள் ஆகியன வல்லுனர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.தினந்தோறும் தம்பதி சமேதராக வருகை தந்து குத்துவிளக்கு ஏற்றி இந்நிகழ்வைத் துவங்கிவைப்பது இதன் சிறப்பு.இதன் நிறைவு நாள் விழா நாளை 30-05-2016 திங்கள் அன்று புதுப்பேட்டை சரஸ்வதி வித்யாலயாவில் நடைபெறுகின்றது.பரிசுகளும் சான்றிதழ்களும் பங்கேற்றோருக்கு வழங்கப் பட உள்ளன.
Wednesday, 4 May 2016
MAY ART CAMP
ஸ்வசிகாவின் ஓவியப் பயிற்சிமுகாம் 21 ஆம் நடைபெற்று வருகிறது
மே 1 ஸ்வாசிகாவின் பிறந்தாநாளை முன்னிட்டு நாங்கள் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தும் ஓவியப் பயிற்சி முகாம்.
21 ஆம் ஆண்டில்...மே 1 முதல் மே 10 வரை ....
கோடையிலே கோலாகலக் கொண்டாட்டம் ....ராஜா ரவிவர்மாவின் திரு உருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
ஸ்வாசிகாவின் 21 ஆவது பிறந்தநாளை உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
முதல் நாள் 145 மாணவர்கள் பயிற்சி முகாமில் இணைந்தனர்

அனைவருக்கும் குறிப்பேடுகள்,பேனா,பென்சில் வழங்கப்பட்டன.
வயது வாரியாக மாணவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வண்ணம் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன,
ஓவிய அடிப்படைகளுடன் சித்திரப் பயிற்சி இனிதே துவங்கியது.
இன்று நான்காம் நாள் ...இது வரை 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பெற்று வருகிறார்கள்.
தொடர்ந்து 10 நாட்களும் நானும் இன்னும் பலநல்ல உள்ளம் கொண்ட சிறந்த ஓவியக் கலைஞர்களும் இணைந்து பயிற்சிகள் வழங்குகின்றோம்.
இம்முகாமில் பங்கேற்று தம் திறமையை பட்டை தீட்டி இன்று ஓவியக் கலையில் சிறந்துவிளங்கும் எங்கள் மாணவர்களும் எம்மோடு இணைந்து பயிற்சி அளிக்கிறார்கள்.
நிறைவு நாள் அன்று போட்டிகளும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய சித்திரக் கண்காட்சியும் நடைபெறுகின்றன .
மேலும் பயிற்சி அளித்த கலைஞர்களின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
அனைத்துக்கும் மேலாக முதுபெரும் ஓவியரும் இன்று கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது மாநிலம் முழுதும் பரவியுள்ள ஓவியர்களின் திறமைக்கு வித்திட்டவருமான ஓவியர் திரு ஹரிகிருஷ்ணன் (ஹரி ஆர்ட்ஸ் ) அவர்களுக்கு சித்திரக்கலா ரத்னா என்னும் பெருமைமிகு விருது வழங்கும் விழா நிகழ்வும் நடைபெற உள்ளது .
அனைவரும் வருகைதந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, 9 October 2015
கலை விழா போட்டிகள்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கடலூர் கல்வி மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகள் நடைபெற்றன .இம்மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் நடக்கவிருந்த இப்போட்டிகள் முன்னதாகவே 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்றன .அதற்கான சுற்றறிக்கை 7 ஆம் தேதி மதியம் தலைமையாசிரியரால் வழங்கப்பட்டு ...நன்கு கவனிக்கவும் 7 ஆம் தேதிப் போட்டிக்காக 7 ஆம் தேதி சுற்றறிக்கை ...காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் தேர்வுத் தாட்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கிக் கொண்டிருந்த சக ஆசிரியர்களின் பொருமல்களுக்கிடையே -முனு முனுப்புகளுக்கிடையே மாணவர்களை இனம் கண்டு 2 மணி நேரத்திற்குள் அரை குறையாக பயிற்சி அளித்து பெற்றோர்களிடம் தொலைபேசி மூலம் அனுமதி வாங்கி -ஒரு வழியாக 8 ஆம் தேதியன்று கடலூர் மஞ்சக்குப்பம் அனைவருக்கும் கல்வி இயக்க வளாகத்தில் போட்டிகளில் கலந்துகொண்டனர்.அங்கு சென்று போட்டிகள் ஒருங்கிணைப்பாளரிடம் விசாரித்ததில் மேலிடத்திலிருந்து போட்டிகளை விரைந்து முடிக்கச் சொல்லி உத்தரவு என்றார் ,உண்மைதான் மேலிடது உத்தரவுகளை அடுத்தடுத்த தளங்களில் பின் பற்றுவதில் ஏதும் சிக்கலில்லை .கல்வி இயக்குனர்கள் சொன்னால் முதன்மைக் கல்வி அதிகாரிகளும் ,முதன்மைக் கல்வி அதிகாரி சொன்னால் மாவட்டக் கல்வி அதிகாரிகளும் அவர்கள் இருவரும் சொன்னால் உடனே தலைமை ஆசிரியர்களும் ...தலைமை ஆசிரியர் சொன்னால் அனைத்து ஆசிரியர்கள் கேட்டு உடனே அதன்படி செயல்படுவதும் ...எல்லாம் இந்த மட்டம் வரை சரியாக போய்க்கொண்டுதான் இருக்கிறது .இதற்குப் பின்தான் சிக்கலே ...ஆசிரியர்கள் சொன்னால் மாணவர்கள் கேட்கிறார்களா?அதற்கான சூழல் இப்போது இருக்கிறதா? போட்டியில் கலந்துகொள்வதற்கான 20 மாணவர்களை அடுத்த நாள் காலை ஆயத்தப் படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது எப்படியோ ...கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த போட்டிகளில் எங்கள் பள்ளியும் கலந்துகொண்டுவிட்டது .வெற்றி தோல்வி பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள முடியவில்லை .தகுந்த பயிற்சியே இல்லாமல் ...ஒத்திகை இல்லாமல் வெற்றியை எதிர்பார்க்க என்ன அருகதை இருக்கிறது .அநேகமாக வந்திருந்த எல்லா பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான் . போட்டிகள் எல்லாமே கடமைக்கு நடைபெறுவதாக தோன்றுகிறது .உண்மையான அர்பணிப்பு உணர்வில்லாமல் கடமைக்கு செய்கின்ற எதுவுமே வீண்தான் .மத்திய அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை மூலம் நடத்தும் இப்போட்டிகள் முதலில் கல்வி மாவட்ட அளவிலும் ,பின்னர் மாவட்ட அளவிலும் அதனைத் தொடர்ந்து மாநில அளவிலும் நிறைவாக தேசிய அளவிலும் நடைபெற உள்ளன .கலைவிழாவின் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 12 ஆம் தேதியன்று கடலூரில் நடைபெற உள்ளன .அவையாவது நல்லபடியாக நடக்கட்டும் .அதிருக்கட்டும் ...நான் அழைக்கும்போது மாணவர்கள் ஆர்வத்தோடு வரவேண்டுமே ...என் மீது ஒரு பிடிப்பு வேண்டுமே ... முடிந்த பின்னர் அவர்கள் அனைவரையும் கடலூர் தேவனாம்பட்டினக் கடற்கரைக்கு ...சில்வர் பீச் .அழைத்துச் சென்று கடற்கரையில் மகிழ்ச்சியாக அவர்களை விளையாடவிட்டு அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நானும் மகிழ்ந்து அவர்களுடன் மகிழ்ச்சியில் பங்கேற்று
பின்னர் அவர்களை பத்திரமாக பண்ணுருட்டிக்கு அழைத்து வந்தபிறகுதான் மனம் நிம்மதியாயிற்று .
பின்னர் அவர்களை பத்திரமாக பண்ணுருட்டிக்கு அழைத்து வந்தபிறகுதான் மனம் நிம்மதியாயிற்று .
Monday, 27 July 2015
கனவு கலைந்தது
கனவு கலைந்தது
கனவு காணச் சொன்ன எங்கள் அறிவியலே ...
நீ பிறப்பால் ஒரு இசுலாமியன் ...
உன்னால் இரும்பூது எய்தியது இசுலாம் மதம் ...!
நீ வளர்ப்பால் ஒரு தமிழன் ....!
தற்பெருமையால் தலை நிமிர்ந்தது தமிழகம் ...!
உன் கல்வி அறிவால் மேதைமையால்
ஒரு இந்தியன் .....!
இதயமெங்கும் கர்வம் கொண்டது இந்தியா .....!
மதங்களைக் கடந்து மக்களின் நேசிப்பால்
ஒரு சிறந்த மனிதன் ...உன்னதன் ...!
உற்சாகம் கொண்டது உன்னால் உலகம் ....!
மாணவர்களைக் கனவு காணச் சொன்ன
எங்கள் கனவு மனிதனே ...!
நீயே இன்று கலைந்துபோனதால் ......
மனம் கனத்தது மனிதம் ...!
Subscribe to:
Posts (Atom)