Tuesday, 30 September 2014

நீர்

தன்வந்திரி கோவில் சுவற்றில் 

எழுதப் பட்டு இருந்தன 

நீரின் பண்புகள்....

ஆற்று நீர் ,ஊற்று நீர் ,

அருவி நீர் ,கடல் நீர் ,

ஏரி நீர் ,சுனை நீர் ,

கிணற்று நீர் ,மண் பானை நீர்...

ஒன்றை மட்டும் விட்டுவிட்டார்கள் ... 

நம் வீட்டில் நாம் தினமும் குடிக்கும்

 'கேன்' நீர் 








Monday, 29 September 2014

சிறைவாசம்

         



மாலை சூரியன் 

மலைகளில் ஒளிந்து 

கண்ணாமூச்சி ஆடப் புறப்படும் வேளை 

என் கண்ணிலா பட்டுத் தொலைக்க வேண்டும்

தண்டனை ...

புகைப்  படக் கருவிக்குள் 

காலவரையற்ற சிறைவாசம் ....









இடம் காரையாறு அணை .




வெறுமை

வெறிச்சோடிப்போன 

விளையாட்டு மைதானம் 

வெயிலோடு மட்டுமே விளையாடுகிறது 

விடுமுறைநாட்களில் ...!




விளையாட்டு

கோலி 

கண்ணாமூச்சி 

கில்லி தாண்டா 

மாண்டா பம்பரம் 

மாஞ்சா நூல் பட்டம் 

ஏழாங்காய் 

பச்சைக் குதிரை 

பல்லாங்குழி 

ஒரு குடம் தண்ணி மொண்டு ஒரே பூ பூத்தது ...

முல்லைப் பூவே முல்லைப் பூவே மெல்ல வந்து கிள்ளிட்டுப் போ 

என அத்தனையும் ஏப்பம் விட்டு 

சுட்டித்தனத்தை கட்டிப் போட்டு 

எங்கள் குழந்தைகளின் குழந்தைத் தனத்தோடு 

விளையாடிவிட்டது

தொலைக் காட்சி .










Sunday, 28 September 2014

கலவரம்

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் 

பிய்ந்து போன காலணிகள்

உடைந்து நொறுங்கிக் கிடக்கும்  

கண்ணாடிச் சில்லுகள் 

உறைந்துபோய் திட்டு திட்டாய் 

இரத்தக் குளங்கள் ...!

எரிந்து புகைந்துகொண்டிருக்கும் 

இருசக்கர வாகனங்களும் பேருந்துகளும் 

கதறிப் பரிதவித்த 

மானிட ஓலங்கள் தொலைத்து 

மௌனத்தை மட்டுமே சாட்சியாய் 

மிச்சம் வைத்திருக்கிறது 

கலவரம் ஒடுக்கப்பட்டு 

கலைந்து கிடக்கிற சாலை !








அச்சம்


இலைகள் அடர்ந்த மரம் 

இன்னும் துளிர்க்கிறது 


இருப்பினும் ஓர் அச்சம் 


அருகில் 


வெட்டுப்பட்ட மரத்தின் மிச்சம் !









Thursday, 25 September 2014

நவீன ஓவியங்கள்

தார்ச் சாலையில் 

ஓர மரங்களின் கீழே மட்டும் 

வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாய் 

நவீன ஓவியங்கள் ...!

பறவை எச்சங்கள்