Wednesday, 21 December 2016
Saturday, 10 September 2016
Teachers' Anthem - Inspirational Tamil Video Song - Aasiriyar Geetham
தேசியத்துக்கு கீதம் ,மொழிக்கு கீதம் இவை தாண்டி எம் போன்ற ஆசிரியர்களுக்கும் கீதம் ....மிக்க நன்றி ...அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ... பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தன .....!பெருமிதம் தலைதூக்கி ஆசிரியனாய் இருப்பதற்கு கர்வம் கொடுக்கிறது...மறுபிறவி ஒன்று இருக்குமேயானால் அதிலும் ஆசிரியனாகவே பிறக்க ..ஆசை.!
Teachers' Anthem - Inspirational Tamil Video Song - Aasiriyar Geetham
தேசியத்துக்கு கீதம் ,மொழிக்கு கீதம் இவை தாண்டி எம் போன்ற ஆசிரியர்களுக்கும் கீதம் ....மிக்க நன்றி ...அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ... பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தன .....!பெருமிதம் தலைதூக்கி ஆசிரியனாய் இருப்பதற்கு கர்வம் கொடுக்கிறது...மறுபிறவி ஒன்று இருக்குமேயானால் அதிலும் ஆசிரியனாகவே பிறக்க ..ஆசை.!
Sunday, 4 September 2016
இளையராஜாவின் கீதாஞ்சலி
கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம்
செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம்
அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி
உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி
சங்கரன் உதித்தானே காலடியில்
அவன் சகலமும் அறிந்தது உன் காலடியில்
புவனங்கள் தழைப்பது உன் பூவடியில்
என் புத்தியும் லயிப்பது உன் சேவடியில்
ஆதியும் அந்தமும் ஏதுமில்லாதொரு சோதி என்றாகிய சுந்தரியே
பூத கணங்களும் தேவ கணங்களும் ஓதி உணர்ந்திடும் பண்டரியே
ஆய கலைகளும் வேத முறைகளும் பாத மலர் தொழும் சங்கரியே
வாய் உள்ள வரையினில் வாழ்த்தி வணங்கிடும் தாய் உனை எந்தன் சந்ததியே
சந்ததம் உனை பாடும் இச்சையம்மா
அந்த இச்சையும் நீ கொடுத்த பிச்சையம்மா
சிந்தையில் நிலைத்திருக்கும் பக்தியம்மா
எனக்கும் பக்தியல்லால் ஏது சக்தியம்ம்மா
கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம்
செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம்
அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி
உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி
இளையராஜாவின் கீதாஞ்சலி !!!!!
Wednesday, 10 August 2016
Wednesday, 3 August 2016
சூழல் காப்போம்
கதிரோன் அனல் கக்கிக் காய்கின்ற
வெய்யில் தாங்காமல் கடைசி நீர்துளியின்றி
கண்மாய்கள் கூட வறண்டுவிட்டன ...
கண்ணீர்கூட வரமறுக்கின்றது வற்றிப்போய் ....
கதறல் ஒளி கூட தொண்டையோடு நின்று அடம் பிடிக்கின்றது....
கட்டறுந்துவந்த காளைக்கன்று
கண்ணுக்கெட்டிய வரையிலும்
கழனியெங்கும் பசுமை காணாமல் பரிதவிக்கின்றது .
கள்ளிச் செடிகள்கூட சருகுகளாய் சதைகள் வற்றிப்போய்
கருத்து சுருண்டு முட்கள் கொண்டு முன்னுரை வாசிக்கின்றன ...
கட்டிய மனைவிக்கும் பெற்ற மக்களுக்கும்
கஞ்சி ஊற்றிக் கால்வயிறுகூட நிரப்பக் கூட
கதியற்றுப்போன விவசாயிகள் விரக்தியில் வெறுத்துப்போய் ...
கயிறுகட்டித் தொங்கி உயிர் தொலைக்கின்றனர்....
கடைசி இலைகூட மிச்சம் வைக்காமல் உதிர்த்து கிளைகள் மட்டுமே உள்ள பட்ட மரங்களில்
கலாம் கண்ட வல்லரசுக்கனவு
கலைந்துப்போய் காற்றில் கரைகிறது ...
கர்நாடகத்துக் குடகில் தலைக்காவிரி வழிந்து
கரைபுரண்டு ஓடியதெல்லாம் வீணாய்ப் போன வெறுங்கதைகள்....
கவின்மலையாலாக் கேரளமும் தன்
கரையனைத்துப் பாய்ந்த நீர் சென்ற வாடுமட்டும் தாங்கி ....
கங்கையும் யமுனையும் பிறந்து வரும் இமயத்துக்
கடும் பனிப் பாறைகளும்கூட உருகி உருக்குலைந்துபோய்
கட்டுக் குலைந்துபோன கட்டழகியின் கிழட்டு உடம்பின் சுருக்கங்களாய்
கடும் வெடிப்புப் புரையோடிப்போகின்றது பூமியெங்கும்
கடல்கூட வற்றிப்போய் வேற்று மணல் பாறைகள் மட்டுமே காட்சிக்கு விருந்தாய் ....
கண்ணெதிரே காணும் கானல் நீர் மட்டுமாவது நம்பிக்கை அளிக்குமா என்ன
காரிருள் எதிர்காலம் தொலைப்பதற்கு....?
கணவாய் மட்டும் ஒருவேளை இக்காட்சி இருந்துவிட்டால்
கட்டாயம் வரும் நிம்மதி பெருமூச்சு ...
கனவுகள் நிஜமாகாது ...நீரும் பசுமையும் நீங்காது இந்நிலவுலகைச் சூழ்ந்திருக்க
கரங்கள் கோர்ப்போம் ...நம் சூழல் காப்போம் ...!
Sunday, 29 May 2016
பாலர் பண்பு பயிற்சி முகாம்
சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் ஸ்வாசிகா இயக்கம் இணைந்து நடத்தும் பாலர் பண்பு பயிற்சி முகாம் 20-05-2016 முதல் நடைபெற்று வருகிறது. யோகா, சூரிய நமஸ்காரம்,இசை பாடல்கள் ,விளையாட்டுகள்,அறிவுக்கூர்மை பயிற்சிகள் ஆகியன வல்லுனர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.தினந்தோறும் தம்பதி சமேதராக வருகை தந்து குத்துவிளக்கு ஏற்றி இந்நிகழ்வைத் துவங்கிவைப்பது இதன் சிறப்பு.இதன் நிறைவு நாள் விழா நாளை 30-05-2016 திங்கள் அன்று புதுப்பேட்டை சரஸ்வதி வித்யாலயாவில் நடைபெறுகின்றது.பரிசுகளும் சான்றிதழ்களும் பங்கேற்றோருக்கு வழங்கப் பட உள்ளன.
Subscribe to:
Posts (Atom)