Thursday, 8 March 2018

நவீன திருவள்ளுவ மாலை

நவீன  திருவள்ளுவ மாலை

உலகத்தில் வாழ்கின்ற மக்கள் எல்லாம்
               உணர்ந்துய்யும் வகையினிலே அழகாய்த்தானே


Tuesday, 6 March 2018

எம் நூற்றாண்டுப் பள்ளியே ...



                                                         நூற்றாண்டு விழா காணும் 

                           தொரப்பாடி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கான                                         

                                                             வாழ்த்துக் கவிதாஞ்சலி   







இது என் தாய்க்கு நான் பாடும் தாலாட்டு
என்தாய்க்கு என்றா கூறினேன் ...?
இல்லை ...இல்லை...நம் தாய்க்கு
தாலாட்டு என்றா கூறினேன் ...?
இல்லை இல்லை ...
நான் என்ன இவளை உறங்க வைக்கவா போகிறேன் ?
அல்லவே ...
உற்சாகப் படுத்தத்தானே போகிறேன் ...!
அப்படியானால்  இவளை துயிலெழுப்ப
நான் பாடும் சுப்ரபாதம் ...
திருப்பள்ளியெழுச்சி ...

பாரதியும்  பாடினான் அன்று
பாரதமாதாவுக்கு ஒரு பள்ளியெழுச்சி
இன்று இந்த மாணவ நண்பனும் பாடுகிறேன்
என் பள்ளிக்கும் ஒரு பள்ளியெழுச்சி
இதற்கு காரணம் என் மாணவ சகோதர்களின்
பள்ளிக்காய் திரண்ட சீர்மிகு எழுச்சி !

பள்ளிக் கூடம்
இரண்டு வார்த்தைகளில் ஒரு கவிதை
ஏழு எழுத்துக்களில் எனக்கு வாய்த்த ஒரு அம்மா
எனக்கு மட்டுமா?
இதை இங்கே கூட்டமாய் குழுமி இருக்கிறோமே
நம் அனைவருக்கும் கூட
இவள்தானே தாயுமானவள் ...!

என் தாயுமானவளே ...!
என் இரண்டாம் தாயே ...!
இன்னுமேன்உ றக்கம் ...துயிலெழு !

நம்மை ஈன்ற அன்னை கூட
நம்மை சுமந்ததென்னவோ பத்து மாதங்கள்தான்
ஆனால் எம் தாயே...!
ஐந்து  ஆண்டுகள் அல்லவா எங்களை சுமந்திருந்தாய்
உன் வகுப்பறை என்னும் கருவறையில்
அன்று மாணவனாய்க் கருக்கொண்டோம்
எங்கள் ஆசான்கள் ஊட்டிய அமுதக்  கல்விப்  பாலைப்
பருகிய காரணத்தால் அல்லவா இன்று
ஆசிரியனாய்
மருத்துவனாய்
பொறியாளனாய்
காவல்துறை அலுவலனாய்
வழக்கறிஞனாய்
விஞ்ஞானியாய்
கலைஞனாய்
கவிஞனாய்
இன்னும் இன்னும்
பல்கலை வித்தகனாய் உருக்கொண்டோம்...!
அத்தனைக்கும் மேலாய்
நல்ல மனிதனாய் இருக்கின்றோம்...!
எமையெல்லாம் ஆசிர்வதிக்க எண்ணமில்லையா../
விரைந்து துயிலெழு 1

அன்று தொடங்கி இன்று வரையிலும்
மாணவச் சமுதாயமாகிய எங்களையெல்லாம்
ஆசான்கள் என்னும் சிற்பிகள் கொண்டு
அனுபவம் என்னும் உளியினால்
செதுக்கிச் சிலையாக்கும் சீர்மிகு பணிக்குக்
களம்  அமைத்துக் கொடுக்கும்
சிற்பக்  கூடம் அல்லவா நீ!
சீக்கிரம் துயிலெழு !

நூற்றாண்டுகளின் நுழைவாயிலை நோக்கி
பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் உனக்கு
ஆண்டுகள் பல கடந்தாலும் 
எம் தமிழன்னைபோல சீரிளமை கொண்டு இளங்குகின்றாய் 
உன் மக்கள் அல்லவா  நாங்கள் !
உன்நூற்றாண்டைக் கொண்டாட மனம் கொண்டோம்

தலைமையாசிரியரின்  பகீரதப் பிரயத்தனம் காரணமாய்
இங்கு பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் உறுதுணையாய் நிற்க 
இவ்வூரின் நாலஉள்ளங்கள் பல ஆதரவுக்கு கரம் நீட்ட

புத்துணர்வு பெற்று இன்று
புத்தொளிர் பள்ளியானாய்
பெருமிதத்துடன் பூரித்து நிற்கிறாய்!
போதும் உறக்கம் ...! உடனே துயிலெழு !

எம் தாயே ...!
குடியிருந்த கோயில் காண நாங்கள்
குவிந்துள்ளோம் ஒன்றாய் இன்று...!
பல தலைமுறைகள் உன்னால்தான் இன்று
நாங்கள் அனைவரும் உன்னில் இன்று ...!
வாழ்விற்கான பாதையை காட்டிய வள்ளலே ...!
வாழ்வாங்கு நாங்கள் வாழும் செய்திகள் பகிர
எங்கள் கால்கள் உனக்கான பாதை நோக்கப் பயணப்பட்டன
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயாய்
நீ திகழும் கோலம் காண கூடியுள்ளோம் இங்கு.
நின் பாதமலர் தொழுகின்றோம்
எம் பள்ளியே துயிலெழு !

இதோ நாங்களெல்லாம்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி மூழ்கி
மலரும் நினைவுகளை
முத்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம்!
நெகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்து
பள்ளிப் பருவ  நினைவுகளை
பிள்ளைப் பருவ நினைவுகளை 
அசை போட்டு மகிழ்கின்றோம் !
அறிவுக் கண் திறந்த  ஆசான்களையெல்லாம்
ஒருங்கே கண்டு கண்கள்  பனித்திருக்கின்றோம் !
ஒளிவிளக்கே துயிலெழு!


உன்னால் நாங்கள் பெருமை அடைந்தோம்...!
இன்று உன்னையும் நாங்கள் பெருமைப் படுத்துகின்றோம்!
இப்பள்ளியில் படிப்பதனால்  பெருமையடைகின்றோம்...!
இப்பள்ளியும் எங்களால் பெருமையடைச் செய்வோம்
என்ற உறுதிமொழி ஏற்றோம் அன்று !
அவ்வுறுதிமொழியினை நிறைவேற்றி
அனைவரும் உன்முன்னே இன்று !
அன்பே துயிலெழு!

உன்னில் நான் படித்த காலங்கள் என் கண்களில் நிழலாடுகின்றன .

அப்போது நீ புதுப்பேட்டை கடைவீதியில்  V.V.பாஸ்கர் அவர்களின் இல்லத்திற்கு எதிரே ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கி கொண்டிருந்தாய் .

உனக்கு ஒரு பெயர் கூட உண்டு ..பொம்பள பள்ளிக் கூடம்

வைசியர் சத்திரத்தில் இயங்கி வந்த 
தொடக்கப் பள்ளி ஆம்பளை பள்ளிக் கூடம் ..

ஆம் ...அப்போது எல்லாருமே அப்படிதான் அழைத்தார்கள் 
இரு பள்ளிகளையும் ...!

இதுவரையிலும் அதன் காரணம் என்னவென்று எனக்கு விளங்கியதேயில்லை ...!

உன்னை நான் தாயாக உருவகிக்க 
நீ பொம்பளை பள்ளிக் கூடம் என்பதன் காரணமாகவும் இருக்கலாம் .


என்னை என் தந்தை முதன் முதலாய் சீருடை மாட்டி 
பள்ளிக்கு அழைத்து வந்த காட்சி என் கண்முன் விரிகிறது ...

பள்ளியில் சேர்க்கைக்கான தேங்காய் ,வெற்றிலை பாக்கு , 
வாழைப் பழம்  , பூ இவற்றோடு 
ஒரு பைசாவுக்கு  விற்குமே ..
ஆரஞ்சு சுளை மிட்டாய் அதில் ஒரு பாக்கெட் வாங்கி கொண்டு 
என் பிஞ்சு விரல்கள் பிடித்துக்கொண்டு 
ஆந்த ஓட்டுக்  கட்டிடத்தின் உள் நுழைகிறார்.
அவர் ஒரு ஆசிரியர் .
அவரை அப்பள்ளியில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது .தவிர என்சிற்றப்பா திரு குப்பு சாமியும் , சித்தி திருமதி ஞானமும்  கூட அப்பள்ளியில் அப்போது பணிபுரிந்துகொண்டிருந்தார்கள்.
எனவே அப்பாவை அங்கிருக்கும் ஆசிரியர்கள் எல்லோருக்கும்
நன்கு தெரிந்திருக்கிறது.
இல்லே நுழைந்தவுடன் அங்கிருக்கும் தலைமை ஆசிரியர் -
அவர் ஒரு ஐயங்கார் அல்லது அய்யர் என்று நினைவு -
அவர் பெயர் வரத ராஜன்   என நினைக்கிறேன்.
நல்ல உயரம் .கோண வகிடு எடுத்து
தலையைத் தூக்கி வாரியிருப்பார் .
மெல்லிய சிவப்புக் கோடாய் நாமம் இட்டிருப்பார் .
தடித்த பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி அணிந்திருப்பார் .
அவர் என் தந்தையை  வரவேற்க
என் தந்தை அவருக்கு வணக்கம் சொல்லி
பின் என்னையும் அவருக்கு வணக்கம் சொல்ல வைக்கிறார்.
நான் சற்றே நெளிந்தபடி வணக்கம் வைக்கிறேன் .
பின்னர் அட்மிஷன் செய்வதற்காக வேண்டி என் கரம் பிடித்தபடி 
வெயில் வாங்கும் முற்றம் தாண்டி 
இன்னும் இன்னும் உள்ளே போய் 
கட்டிடத்தின் பின் கட்டின் வலப்புறம் உள்ள பகுதிக்கு செல்கின்றார் .

அங்கு ஒரு பெண் ஆசிரியர்
வெண்ணிறத் துணியால் முக்காடு போட்டபடி இருக்கிறார்
அவரை எல்லோரும் சாயபு டீச்சர் என்று அழைக்கிறார்கள்  .. 
சற்றே மெல்லிய ..கரிய நிற உருவம் ...வாங்க சார் என்று என் அப்பாவை வரவேற்று அவருக்கு வணக்கம் சொல்லியபடி என்னை  பார்த்து சிரித்தபடி தன்னருகில் அழைத்து அணைத்தபடி இருக்க ...
நானோ திமிறி அவரது பிடியினை  விடுவித்தபடி 
என் அப்பாவின் வேட்டி சுற்றிய கால்களை 
இறுக்கப் பற்றி பின் புறமாய் ஒளிந்துகொள்கிறேன் 

இதற்குள் தலைமை ஆசிரியர் ... 
என்  அப்பாவிடம் இருந்து பூஜை பொருட்களை வாங்கி 
அங்கிருந்த சாமி படத்தின் முன்பாக வைத்து படைக்கிறார் .
என்போலவே பள்ளியில் சேர வந்திருந்த 
இன்னும் சில என் வயது ஆண் ,பெண் பிள்ளைகளும் 
அழுதபடி ...கண் கலங்கிய படி நிற்க , எனக்கும் அவர்களுக்கும் ஆரத்தி காட்டி திரு நீறு இட்டு மிட்டாய்களை வழங்குகிறார் அவர் .
பின்னர் ,புதிய சிலேட்டு ,பலப்பம் ,
அரிச்சுவடி அட்டை ,ஆகியவற்றையும் 
புதிய பையில் போட்டு என்னிடம் அளிக்கிறார் ....

புதிய அரிச்சுவடியை வெளியே எடுத்து முகர்கிறேன் நான் ..
புதிய பெயின்டின் காகிதம் கலந்த  மணம்  மூக்கை வருடுகிறது .

கையில் உள்ள மிட்டாய்களில் இரண்டை வாயில் இட்டு சுவைக்கிறேன் .

மிட்டாய் வாயில் போனதுமே ஒரு மலர்ச்சி ...
என் முகத்தில் தென்பட்டிருக்க வேண்டும் ..
சாய்பு டீச்சர் என் தந்தையிடம் இருந்து என்னை வாகாக , 
மென்மையாக  தன்னருகில் இழுக்கிறார் 

என்னை மெதுவாக தன மடியில் இருத்தி 
பையில் இருக்கும் சிலேட்டை வெளியில் எடுக்கிறார் .
பலப்பம் கடினமாக இருக்கும் எனக் கருதியோ என்னவோ 
தன கையில் இருந்த சாக்பீஸை 
என் கையில் கொடுத்து பிடிக்கச்செய்து 
என் பிஞ்சு விரல்கள்  பிடித்து சிலேட்டில் -அட்டை சிலேட் அது -
ஒரு புறம் ஆனா ...என்று   கீச்சுக் குரலில் முழக்கியபடி 
என்னை பெரிதாக   எழுத வைக்கிறார் ..
ம்ம் ..என் கூடவே சொல்லு என்றபடி என்னையும் கூற சொல்கிறார் 
மில்லிய குரலில் சொல்கிறேன் ...ஆனா ....!
பின்னர் மீண்டும் மீண்டும்  கோட்டின் மேலேயே 
விரல்களை செலுத்தி பல க்களை கோட்டின்  மேல் கோடுகளாக
எழுத வைக்கிறார்...மீண்டும் மீண்டும்  எழுத  வைக்கிறார் ...
பின்னர்   சிலேட்டின் பின்புறம்   திருப்பி 1 என்ற எண்ணை 
விரல் பிடித்து பெரிதாக எழுத வைக்கிறார் ...
நானும் எழுத எனது முதுகில் மென்மையாகத் தட்டிக் கொடுத்து
வெரி குட் என்று பாராட்ட நான் என் அப்பாவைப் பார்த்து சிரிக்கிறேன் ...

.பின்னர் அங்கிருக்கும் அனைவருக்கும் என் கையால் ஆரஞ்சு சுளை மிட்டாய்களை வழங்க வைக்கிறார் பிறகு ஏற்கெனவே அங்கு புதிதாய் சேர்ந்த மற்ற குழந்தைகளோடு என்னையும் அமரவைக்கிறார்கள்.
பின்னர் என் தந்தை என்னிடம் அழகி கூடாது ..
பள்ளி விட்டதும் அம்மா வந்து அழைத்துச் செல்வார்கள்
என்று கூறி எனக்கு டாட்டா காட்டி
அனைவரிடமும் விடை பெற்று வெளியில் செல்கிறார்.
என் வீடு பள்ளிக்கு மிக அருகாமையில் உள்ளது என்பதனாலோ
அல்லது சிற்றப்பா ,சித்தி ஆகியோர் உள்ளதாலோ என்னவோ
நான் சமர்த்தாக வகுப்பறையில் அமர்ந்துகொள்கின்றேன்...
இது என் முதல் நாள் நினைவு ...பனி படர்ந்த நினைவுகளின்
நினைவுகலில் பனி விளக்கி வரைந்தது .இன்னும் பல நினைவுகள் ..

எதை சொல்வது எதை விடுவது ..

இரண்டாம் வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த
திருமதி ராஜாமணி டீச்சர்... இவர் எங்களுக்கு தூரத்து உறவு .தவிரவும் என்னுடன் நண்பனாய் பழகி வந்த சந்துரு என்பவனை பாட்டியும் கூட .இவரையும் அடிக்கடி சந்தித்திருக்கிறேன் .இப்போதுதான் மூன்று வாரங்களுக்கு முன்னர் காலமானார் .
மூன்றாம்  வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த
திருமதி ஜெயா டீச்சர் ..இவர் போஸ்ட் மேன் மணிவண்ணன்
அவர்களின் தாயார் ..ஓய்வு பெற்ற  பின்னும் கூட
போஸ்ட் ஆபீஸ் ஆர் .டி  பணம் கட்டும் சேவைக்காக
எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார் .
தவிர இவரது பெண்களில் ஒருவர் என் தங்கையின்
வகுப்புத் தோழி என நினைக்கிறேன் .
நான்காம் வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த
திருமதி  மும்தாஜ் டீச்சர் .இவர் தற்போது  என் இல்லத்திற்கு
அண்மையில் வசித்துவருகிறார் ...இல்லை இல்லை ...அவர் வீட்டுக்கு அருகாமையில் தான் நாங்கள் வீடுகட்டியுள்ளோம் .
ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான்.

இன்னும் ஆலிஸ் டீச்சர் ,
தொரப்பாடியிலிருந்து வரும் ராஜாமணி சார் ,லூக்  ஜீவானந்தம் சார் ,
குப்பா சித்தப்பா ..ஞானம் சித்தி போன்றோர்கள்
எனக்கு வகுப்பு ஆசிரியர்களாக இல்லாவிட்டாலும்
பாடம் போ தித்தவர்கள்.

வெயில் வாங்கும் பெரிய சதுர முற்றம் என்று குறிப்பிட்டு இருந்தேனே ...
அங்கு ஒரு கொதிக்க கம்பமும் இருந்தது .
தினமும் அங்குதான் இறை வழிபாட்டுக் கூட்டமும் நடக்கும்.

தலைமை ஆசிரியரின் அறை  உள்ளா அல்லது
அருகில் உள்ள மற்றொரு இலேசாக இருள் சூழ்ந்த அறையிலா                     சரியாக நினைவில்லை...கண்ணாடிக் குப்பிகளில்
பதப்படுத்தப் பட்ட பாம்பு போன்ற உயிரினங்களை
வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

பள்ளி ஆண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
எண்களிக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும் ...
நான் மூன்றாவது படிக்கும்போது என நினைக்கிறேன்
அப்போதைய பிரபலமான எம் ஜி ஆர் பாடல்
இது சொர்கத்தின் திறப்பு விழா ...புது சோலைக்கு வசந்த விழா ..
என்று துவங்கும் பாடலை
இன்று பள்ளியின் ஆண்டுவிழா ....என்று மாற்றி இட்டுக்  கட்டிய
பாடலாக மாற்றி இனிய குரலில் பாடிய வண்ணம்
சில நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்
அக்காக்கள் கலர் கலராக பாவாடை தாவணியெல்லாம் அணிந்து கோலாட்டத்தினை ஆடி பயிற்சி எடுப்பார்கள் .
அப்பாடல் தான் நான் முதன் முதலாகக் கேட்ட இட்டுக்  கட்டிய பாடல் என நினைக்கிறேன் .

இப்போது நான் கவிதைகள் எழுதுவதற்கும் பாடல்கள்
எழுதுவதற்கும்    அதுதான் விதையாகவும் இருந்திருக்க வேண்டும் ..
பள்ளியின் ஆண்டு விழாவெல்லாம்
பள்ளியின் பின்புறத்தில் உள்ள பரந்த இடத்தில நடந்ததாக நினைவு .
அங்குதான் விளையாட்டுப் பீரியட் எல்லாம் நடக்கும் எங்கள் மைதானத்தைத் தாண்டியதும் கைனா செட்டியாரின் நிலமும்
அதைத் தொடர்ந்து வானூத்தூர் அம்மன் கோவிலும் தெரியும்.

அப்போது அறிவியல் கண்காட்சி ஒன்றிய அளவில்
நடந்தது என நினைக்கிறேன் ..
புதுப்பேட்டை சத்திரம் பள்ளியில்  நடந்த விழாவுக்கு
எங்களையெல்லாம் அழைத்துச் சென்றது நினைவிருக்கிறது .
அதேபோல் புதுப்பேட்டை முருகன் தியேட்டர் ...
இது முத்து மாரியம்மன் கோவில் தாண்டி உள்ளது ..
அங்கு ஒருநாள் பகல் காட்சியாக எதோ குழந்தைகள் படம் ..
பெயர் நினைவிலில்லை ...
அங்கும் எங்களை பள்ளியிலிருந்து
வரிசையாக அழைத்துச் சென்றது இன்னும் நினைவில் உள்ளது...
இப்போதும் சரி அப்போதும் சரி ...
எப்போதுமே மாணவர்களுக்கு பள்ளியை விட்டு
வெளியில் செல்வதானால் மகிழ்ச்சிதானே ...
நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?
கும்மாளத்திற்கு கேட்கவா வேண்டும் ...?
ஒரே கொண்டாட்டம்தான்...
துள்ளித் திரிந்த வண்ணத்துப் பூச்சி பருவமல்லவா அது ..
நாங்கள் பறந்து மகிழ்ந்த நந்தவனம் அல்லவா அது ...!

ஒரு காலத்தில் யாரோ முன் பின் தெரியாதவர்களை
நண்பர்களாக்கி மகிழ்வித்த அந்த புனித மண்ணில்தான் ...
இப்போது முன் பின் அறிமுகமில்லாத
ஒரு ஆணையும் பெண்ணையும் மண மக்களாக மாற்றி
தம்பதிகளாக வாழ்வில் இணைக்கும் ஒரு தளமாகத் திகழ்கின்றது.
ஆம்... காலஓட்டத்தில் நாங்கள் பயின்ற பள்ளி
இப்போது ஒரு திருமண மண்டபம் .

ஆம்  இப்போது  உள்ள லதா ஸ்ரீ நிவாச மஹால் தான் அந்த இடம்...!

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
என்று பாடினான் நம் பாரதி ..
ஆனால் புதுப்பேட்டையின் ராசியோ என்னவோ தெரியவில்லை ...
நான் படித்த  பள்ளிகள்  இடங்கள்
இப்போது திருமண மண்டபங்களாய் ...
ஆம்... தொரப்பாடி பள்ளி இயங்கி வந்த
நிலப் பகுதி லதா ஸ்ரீனிவாச மஹால் ஆனதைப்போல
நான் 6,7 மற்றும் 8 ஆவது வகுப்புகளை படித்த பள்ளியின்இடமும்
திருமண மண்டபம் ஆகவிருக்கிறது ...!

ஆம் ... அந்த இடம் எது தெரியுமா ..?
தற்போதைய பாரத ஸ்டேட் வங்கியின் எதிரே உள்ள இடம்தான் அது ...

நான் தொரப்பாடிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பை முடித்தவுடன்
புதுப்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளியில்
6 ஆம் வகுப்பில் சேர்ந்தேன் ...
அப்போது பள்ளி இரண்டு இடங்களில் இயங்கி வந்தது ,
6 முதல் 8 வரை இடைநிலைக் கல்விக்கூடம் மெயின் ரோடில் இருந்த
ஆரிய வைசியர் சமூகத்துக்கு சொந்தமான
மிகப் பெரிய ஓட்டுக் கட்டிடத்திலும் ,
9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான உயர்நிலைக் கல்விக்கூடம்
பேட்டை வீதியில் தபோது பள்ளி இயங்கிவரும்
அதே இடத்திலும் இயங்கி வந்தது .
அப்போது அப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாய் மாறவில்லை .
அப்போது தலைமை ஆசிரியராய் இருந்த
திரு .பொன் ,சிவநேசன் என்பவர்தான் அதற்கான
ஏற்பாடுகளை செய்து வந்தார் .
அந்த ஆரிய வைசிய சமூகத்திற்கு
சொந்தமான கட்டிடத்தில்தான்
என் பதின் பருவத் துவக்கமும்  இடைநிலைக் கல்வியும்
துவங்கின எனலாம் ..
னாயெங்கள் குடும்பம் அப்போது
அப் பள்ளிக்கு எதிரில்தான் வசித்துவந்தது
அதன் பின் அனைத்து வகுப்புகளும்
பேட்டைத் தெருவில் இயங்கி வந்த
பிரதான பள்ளிக்கே  மாறிப் போக ...
 காலத்தின் சுழற்சி அந்த இடத்தையும் திருமண மண்டபமாக மாற்றிக்கொண்டிருக்கிறது .
என் நண்பர் திரு கனக ராஜ் என்பவர்தான்
அந்த மண்டபத்தைக் கட்டி வருகிறார்.

எது எப்படியோ ...
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாகக் கூறுவார்கள்
சொர்க்கத்தில் யார் வாசம் செய்வார்கள் .?
இறைவன் ... கடவுளர்கள்... அல்லவா ?
அப்போது திருமணம் நடைபெறும் இடம் கூட சொர்க்கம்தான் ...
கடவுள் இருக்கும் இடம்தான் .
அப்படியானால் திருமண மண்டபங்களும்
ஒருவகையில் கோவில்கள்தான் ..
இருந்துவிட்டுப் போகட்டும் ...!

இன்னும் சில துணுக்குச் செய்திகள் இருக்கின்றன ..
நான் படித்த உன்னைப் பற்றி '''

பலப்பம்  ,சாக்பீஸ்  போன்றவற்றை என்னையறியாமல்
வாயிலிட்டு மென்றுவிடுவேன் ..
திடீர் திடீரென்று எனது பிரேம் உடைந்து போன  சிலேட்டின்
நான்கு முனைகளும்  என் பற்கள் பட்டுக் காணாது போகும் ..
போதாத குறைக்கு எனது புத்தகங்களின் நுனிப் பகுதிகளும்
என் பல்லால் அரைபட்டு வயிற்றுக்குள் சென்றுவிடும் ...!

 கண்ணன் மண்ணை அள்ளித் தின்ற பிறகு
 வாயின்  ஓரம் ஒட்டி   இருக்கும்  மண்ணால்
 தன் தாய் யசோதையிடம் மாட்டினானே
அந்தக் கதையாய் என் வாயின் ஓரம் ஒட்டிய
அல்லது உதட்டில் படிந்த வெண்மை நிறத்தால்
சாயபு  டீச்சரிடம் மாட்டிக் கொள்வேன் ..
ஏய் ...சோவைப் பையா ..திரும்ப திரும்ப பலப்பம் சாப்பிடறயா
இரு இரு ... உன் அப்பாவிடம் சொல்றேன்
என்று கீச்சுக் குரலில் கத்தியவாறு
என் காது மடல்களை பிடித்துத் திருகியதை
மறக்க முடியுமா என்ன?


அப்போதெல்லாம் சத்துணவுத் திட்டம் கிடையாது .
மத்திய உணவுத் திட்டம் என்ற பெயரில்தான் அது இருந்தது .
உணவைப் பள்ளி வளாகத்தில் சமைப்பது கிடையாது .
வேறு எங்கோ ஒரு பொதுவான இடத்தில சமைத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் தனித்தனி பேரல்களில்
வேன்  மூலம் வந்து இறங்கும் .
அநேக நாட்களில் சுடச் சுட கோதுமை உப்புமாவோ
அல்லது ஒரு சில நேரம் காய்கறிச் சாதமோதான் வரும் .
அந்த கோதுமை உப்புமாவின் சுவை ஏனோ
எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது .
கோதுமை உப்புமா வழங்கப் படும் நாளில்
எனது வீட்டுக்குச் சென்று ஒரு தட்டோடு வந்துவிடுவேன் .
என் வீடு மிக அருகாமையில் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா ?தட்டில் வாங்கி ,சூடு தாங்காமல்
சிறிது சிறிதாக கையில் எடுத்து ஊதி ஊதி
உருண்டையாக்கி உண்டுவிடுவேன் ..
ஆனால் காய்கறிச் சாதம் -அதுவும் அந்த அரிசியின் பழம் வாசனை
எனக்குப் பிடிக்காது ... வாங்கவே மாட்டேன் ...
அநேகமாக சத்துணவில் அந்த அரிசி வாசனை கூட
இன்னும் மாறவில்லை போலும் .

அடுத்த விஷயம் .எனக்கு பள்ளி ஆசிரியர்களைவிட
ரொம்ப பிடித்தவர் ஒருவர் அப்பள்ளியில் இருந்தார் .
எனக்கு மட்டுமல்ல ..அநேகமாக
எல்லோருக்கும் அவரைப் பிடித்திருக்கும் .
வாட்ச்மேன் மாமாதான் அவர்
லாங்  பெல் அடித்து எல்லோரையும்
வீட்டுக்கு அவர்தானே அனுப்பி வைக்கிறார் .
அப்படிதான் நாங்கள் அந்த வயதில் நினைத்திருந்தோம் .
அவருக்கு பெயர் கூட வைத்திருந்தோம் .
மணி மாமா ...அதாவது மணியடிக்கிற மாமா ...
அதனால்தான் பொங்கல் தீபாவளி என
பண்டிகைக்  காலம் வந்துவிட்டால்
அவருக்கான பணிடிகைக் காசு கொடுக்கும் முதல் ஆளும் நானாகத்தானிருப்பேன்.

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது லட்சுமி ஸ்டுடியோ போட்டோகிராஃபர் தனக்கும்
உயரமான ஸ்டாண்டில் வைத்த  கேமராவுக்குமாய்
ஒரு பெரிய கருப்பு   துணியைப் போர்த்தி
ராஜாமணி டீச்சர் நடுவில் அமர எங்களை தரையிலும் பெஞ்சிலுமாய் வரிசையாய் அமர வைத்து
எடுத்த வகுப்புக் குழுப் படம்.
கருப்பு வெள்ளையில் உள்ள அந்தப் படத்தின்
ஒரு பிரதியை நானும் வாங்கியிருந்தேன் .
என் மாணவப் பருவம் வரையிலும் கூட எங்கள் வீட்டில் அது இருந்தது. பின்னர் எப்படியோ அது காணாமல் போய் விட்டது .
அப் பொக்கிஷத்தை தவற விட்டது எனது துரதிர்ஷ்டம்தான்
அந்தப் போட்டோவில் கூட   நான் டை எல்லாம் கட்டி
ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பேனாக்கும் .

என்ன ...இந்தப் பதிவில் போட 
பள்ளி நினைவாக எந்தப்  படமும் இல்லை.

ஆனாலும் நான் பள்ளி படித்த போது
வெவ்வேறு சமயங்களில் எடுத்த
எனது பால பருவப் புகைப் படங்களை
இங்கு பகிர்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.


எனக்கு பாடம் போதித்த ஆசிரியர்களை பற்றி சொன்ன நான்
என்னுடன் பயின்ற சக நண்பர்களை பற்றிக்
கூறாமல்  விட்டதின் காரணம் ஆசிரியர்கள்
என்   நினைவில் நின்ற அளவு
நண்பர்கள் நிற்கவில்லை என்பதுதான் ... ..


இருப்பினும் எனக்கு மூவர் பெயர் மற்றும் முகம்
ஓரளவு நினைவு வருகிறது..
ஒருவர் எனக்கு இரு வயது மூத்தவர் ...
அவர் பெயர் அப்பர் ...கோட்டலாம்பாக்கம் ...
அவர் எனக்கு வகுப்புத் தோழர் இல்லை ...
அவருடன் பழகியதில்லை ...
அவர் என் மனதில்  பதியக்  காரணம் அவரது பெயர் ...
ஆம் அப்பர் சாமி என்ற என் தந்தையை என் பாட்டி
அப்பர் என்றுதான் அழைப்பார் .
ஒருவேளை அது காரணமாக இருக்கலாம் .
 மற்ற இருவர் தோழா இல்லை ...
 தோழிகள் ...
 ஒருவர் கோட்டலாம் பாக்கம் காவேரி ..
 மற்றொருவர் வெள்ளாஞ்செட்டித் தெரு சித்ரா ...
இருவருமே என்னுடன் முதல் வகுப்பிலிருந்து
ஐந்தாம் வகுப்பு வரைஒன்றாகப் படித்தவர்கள்.

குறிப்பாக தோழி காவேரி தினமும் வெள்ளை நிற பட்டையான
கிரைப் வாட்டர் பாட்டிலில் ஆரஞ்சு சுளை  மிட்டாய் போட்டு
கலர் கலராய் தண்ணீர் கொண்டு வந்து
தானும் குடித்து எனக்கும் கொடுப்பார்..

இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது ...
இதை தட்டச்சு செய்யும் வேளையில் கூட
என் உதட்டில் முறுவல் தவழ்கிறது ...

தோழிகளே ...இருவரும் எங்கு உள்ளீர்கள் தெரியவில்லை ...
ஆனால் நீங்கள் இருவரும் பேரன் பேத்திகளுடன் மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என நம்புகிறேன் ..
இறைவன் எல்லா நலமும் ஆரோக்கியமும் அருளட்டும் ...

முக்கிய செய்தியினை முத்தாய்ப்பாக அல்லவா சொல்லவேண்டும்?

எனக்கு மட்டுமல்ல ...என் தாய் திருமதி சுந்தரவல்லியும் கூட
உன்னிடம்தான் பயின்றுள்ளார்..
அவருக்கும் ,அவருடைய அக்கா
அதாவது எனது பெரியம்மாவுக்கும்கூட
நீதான் கல்விக்கண்ணைத் திறந்துள்ளாய் ....

ஏ அம்மா ...எத்துணை தலைமுறைகளாக
நீ சலிக்காது கல்விப்பணி ஆற்றுகின்றாய் ...?
எத்துணை ஆயிரம் ஆயிரம் பேர்களை
நீ வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய் ...

அம்மம்மா ... நீ என் தாய்க்கும் அம்மா ...
அதனால் நீ எனக்கு அம்மம்மா ...பாட்டி ...
தலைமுறைகள் தாண்டியும் கல்வி தரும்  மூதாட்டி ...!

ஏ தாயே ... என் அருமைப் பள்ளியே ...
 என் நினைவுகளை அலை அலையாய் தவழவிடுகிறாய் ...
என் வசந்த கால வண்ணத்துப் பூச்சிப் பருவத்துக்கு அழைத்துச் செல்கிறாய் ...
 என்னை மட்டுமா ...

இப்பதிவினை கண்ணுறும் அனைவரையும்தாம் ...

உனக்கு என் கோடானு கோடி வணக்கங்கள் ...
 எனக்கு கல்வி போதித்த ...
எண்ணையும் எழுத்தையும் கற்பித்து ஆளாக்கிய
இரண்டாம் பெற்றோர்களுக்கு
என் பணிவான மேன்மையான வந்தனங்கள் ...

எம் நூற்றாண்டுப் பள்ளியே  
எம்மை வளர்த்து ஆளாக்கிய பள்ளியே...!
எம் வாரிசுகளின் வருங்காலத்தையும்
உன்வசமே ஒப்படைக்கின்றோம்
எங்களை போன்றே
அவர்களையும் செதுக்கியெடு!
செம்மைப் படுத்திச் சீர்தூக்கு !
உன்னால் சிறப்புற
உன்னால் மேம்பட
உன்னால் உயர்வடைய
இதோ எம் மாணவர் சமுத்திரம்
உன்முன் தவம் கிடக்கின்றது !
உறக்கம்போதும் அம்மா உடனே துயிலெழு !

எமக்கு அறிவைப் புகட்டிய ஆசான்களுக்கும்
எம் பிள்ளைப் பருவக் குறும்புகளுக்கு
இடம் கொடுத்த உனக்கும்
என் நெகிழ்ச்சிமிகு சமர்ப்பணங்கள் !
என்போன்றே ஆயிரமாயிரம்பேர்
சமர்ப்பணங்கள் ஏற்றிட
எம்தாய் நீ துயிலெழு!

நினைவலைகளில் நீந்திய களிப்புடன் .....!
வாய்ப்புக்கு நன்றி பகிர்ந்து
வழிவிடுகின்றேன் வரும் காலத்திற்கு...!
வசந்தங்கள் காத்திருக்கின்றன ...!
வாருங்கள் என் சொந்தங்களே!
நம்மை வளர்த்துவிட்ட அன்னைப் பள்ளிக்கு 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவோம் ...

நாம் மறைந்தாலும் தலைமுறைகளைத் தாண்டியும் 

நம் தலைமுறைகளை வளர்த்தெடுக்க  வாய்த்திருக்கின்ற 
நல் அன்னையே வாழ்க நீ 
இந்த வையத்து நாட்டிலெல்லாம் ...
வாழிய வாழியவே ...!































உன்னில் நான் படித்த காலங்கள் என் கண்களில் நிழலாடுகின்றன .

அப்போது நீ புதுப்பேட்டை கடைவீதியில் v v பாஸ்கர் அவர்களின் இல்லத்திற்கு எதிரே ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கி கொண்டிருந்தாய் .

உனக்கு ஒரு பெயர் கூட உண்டு ..பொம்பள பள்ளிக் கூடம்

வைசியர் சத்திரத்தில் இயங்கி வந்த 
தொடக்கப் பள்ளி ஆம்பளை பள்ளிக் கூடம் ..
ஆம் ...அப்போது எல்லாருமே அப்படிதான் அழைத்தார்கள் 
இரு பள்ளிகளையும் ...!
இதுவரையிலும் அதன் காரணம் என்னவென்று எனக்கு விளங்கியதேயில்லை ...!

உன்னை நான் தாயாக உருவகிக்க 
நீ பொம்பளை பள்ளிக் கூடம் என்பதன் காரணமாகவும் இருக்கலாம் .

 

என்னை என் தந்தை முதன் முதலாய் சீருடை மாட்டி 

பள்ளிக்கு அழைத்து வந்த காட்சி என் கண்முன் விரிகிறது ...

பள்ளியில் சேர்க்கைக்கான தேங்காய் ,வெற்றிலை பாக்கு , 
வாழைப் பழம்  , பூ இவற்றோடு 
ஒரு பைசாவுக்கு  விற்குமே ..
ஆரஞ்சு சுளை மிட்டாய் அதில் ஒரு பாக்கெட் வாங்கி கொண்டு 
என் பிஞ்சு விரல்கள் பிடித்துக்கொண்டு 
ஆந்த ஓட்டுக்  கட்டிடத்தின் உள் நுழைந்து 
வெயில் வாங்கும் முற்றம் தாண்டி 
இன்னும் இன்னும் உள்ளே போய் 
கட்டிடத்தின் பின் கட்டின் வலப்புறம் உள்ள பகுதிக்கு செல்கின்றார் .

அங்கு ஒரு பெண் ஆசிரியர் வெள்ளையாய் முக்காடு போட்டபடி இருக்கிறார்
அவரை எல்லோரும் சாயபு டீச்சர் என்று அழைக்கிறார்கள்  .. 
சற்றே மெல்லிய ..கரிய நிற உருவம் ...என்னை  பார்த்து சிரித்தபடி தன்னருகில் அழைத்து அணைத்தபடி இருக்க ...
நானோ திமிறி அவரது பிடியினை  விடுவித்தபடி 
என் அப்பாவின் வெட்டி சுற்றிய கால்களை 
இறுக்கப் பற்றி பின் புறமாய் ஒளிந்துகொள்கிறேன் 
இதற்குள் தலைமை ஆசிரியர் ... 
அவர் ஒரு ஐயங்கார் அல்லது அய்யர் என்று நினைவு 
அவர் அப்பாவிடம் இருந்து பூஜை பொருட்களை வாங்கி 
அங்கிருந்த சாமி படத்தின் முன்பாக வைத்து படைக்கிறார் .
என்போலவே பள்ளியில் சேர வந்திருந்த 
இன்னும் சில என் வயது ஆண் ,பெண் பிள்ளைகளும் 
அழுதபடி ...கண் கலங்கிய படி நிற்க , எனக்கும் அவர்களுக்கும் ஆரத்தி காட்டி திரு நீறு இட்டு மிட்டாய்களை வழங்குகிறார் அவர் .
பின்னர் ,புதிய சிலேட்டு ,பலப்பம் ,
அரிச்சுவடி அட்டை ,ஆகியவற்றையும் 
புதிய பையில் போட்டு என்னிடம் அளிக்கிறார் அவர் .

புதிய அரிச்சுவடியை வெளியே எடுத்து முகர்கிறேன் நான் ...புதிய பெயின்டின் காகிதம் கலந்த  மணம்  வருடுகிறது .

கையில் உள்ள மிட்டாய்களில் இரண்டை வாயில் இட்டு சுவைக்கிறேன் .

மிட்டாய் வாயில் போனதுமே ஒரு மலர்ச்சி ...
என் முகத்தில் தென்பட்டிருக்க வேண்டும் ..
சாய்பு டீச்சர் என் தந்தையிடம் இருந்து என்னை வாகாக , 
மென்மையாக  தன்னருகில் இழுக்கிறார் 

என்னை மெதுவாக தன மடியில் இருத்தி 
பையில் இருக்கும் சிலேட்டை வெளியில் எடுக்கிறார் .
பலப்பம் கடினமாக இருக்கும் எனக் கருதியோ என்னவோ 
தன கையில் இருந்த சாக்பீஸை 
என் கையில் கொடுத்து பிடிக்கச்செய்து 
என் பிஞ்சு விரல்கள்  பிடித்து சிலேட்டில் -அட்டை சிலேட் அது -
ஒரு புறம் ஆனா ...என்று   கீச்சுக் குரலில் முழக்கியபடி 
என்னை பெரிதாக அ  எழுத வைக்கிறார் ..
ம்ம் ..என் கூடவே சொல்லு என்றபடி என்னையும் கூற சொல்கிறார் 
மில்லிய குரலில் சொல்கிறேன் ...ஆனா ....!
பின்னர் மீண்டும் மீண்டும்  கோட்டின் மேலேயே 
விரல்களை செலுத்தி பல அ க்களை கோட்டின்  மேல் கோடுகளாக எழுத வைக்கிறார் வைக்கிறார் ...பின்னர் 
  சிலேட்டின் பின்புறம்   திருப்பி 1 என்ற எண்ணை விரல் பிடித்து பெரிதாக எழுத வைக்கிறார் ...நானும் எழுத முதுகில் தட்டிக் கொடுத்து   



Monday, 5 March 2018

முக நூல் உள்ளீடுகள் .

இதெல்லாம் பெரிய  கொடுப்பினை சுரேஷ் ...வரம் வாங்கியிருக்கிறாய் ...நீ ... மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் !

நன்றி அண்ணா !
உம் பணிகள் நிறைவை ... பெருமையை அளிக்கின்றன ... மகிழ்ச்சி ...உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் ...! வருங்கால ஓவியர்களை உருவாக்கும் உம் அர்ப்பணிப்பு பணி  தொடரட்டும் ...

 அடை மழையில் நனைய யாரும் விரும்புவதில்லை ...
 தூறல் மழையின் சாரல்தான் எல்லோருக்கும் பிடிக்கும் ...
 அவ்வளவு ஏன் ...நானே தூறலின் சாரலில் ரசிகன்தானே ..

ஆமாம் அண்ணா ,,,நண்பர்களுக்கு  ஒதுக்குவதில் அலாதி இன்பம் கொள்பவர் ...நானே பல முறை நேரில் கண்டிருக்கிறேன் ...எனக்கும்கூட வியப்பைத் தருபவர் !

மிக மகிழ்ச்சி ...மாலை வணக்கம் !

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரண்ராஜ்

வாழ்த்துக்கள் பிரவீன்
தொடரட்டும் உமது பசுமைப் பணி

இந்த காட்சிகளை நானும் கண்டுள்ளேன் ... எனது கைபேசியில் படம் பிடித்துள்ளேன் ... அனுபவத்தை கண்முன் மீண்டும் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் ...!

மற்றுமொன்று சொல்ல வேண்டும் ...அங்குள்ள சிப்பந்திகள் இனிய உபசரிப்பு ...!


இந்த விழா தனி சிறப்புமிக்கது ...91 வயது இளைஞர் திருகி குரல் குறித்து வெளியிட்ட 90 ஆவது நூல் திருக்குறள் களஞ்சியம் ...அதன் வெளியீட்டு விழா இது...!இதை பற்றி தனியே ஒரு பதிவு நேரம் கிடைக்கும்போது

உண்மைதான் அண்ணா

மைதீன் ...முதலில் சாரி ...உங்கள் பதிவுகள் மட்டுமல்ல ...   பல நண்பர்களின் பதிவுகளைக்
கூட சில நாட்களாகக் காண முடிவதில்லை ...தேர்வு நேரம் அல்லவா ...அப்படியே இணையம் வந்தாலும் கூட  நுனிப்புல் மேய்வதுபோல சில லைக் ,சில ஷேர் என உடனே நழுவிவிடுவேன் ....இன்று கொஞ்சம் நேரம் கிடைத்ததில் ( வலுக்கட்டாயமாக உண்டாக்கிக் கொண்டதில் --அதுவும் எனது பள்ளியின் நூற்றாண்டு விழா பற்றிய பதிவை இடுவதற்காக முக நூல் வந்தபோது உங்கள் பதிவு நோட்டிபிகேஷனில் இருந்ததைக் கண்டேன் .உடன் முழுதும் வாசித்தேன் ...! வழக்கம் போல் நடந்ததை நேரில் காணும் வண்ணம் இருக்கும் வர்ணனைப் பதிவு... உங்கள் நடைக்கு கேட்கவா வேண்டும் ...?

அப்புறம் தோழர் சண்முகம் போல நானும்  எனது வீட்டில் புத்தக ஷெல்பில் வயிறு  பக்கம்  தெரியுமாறு    நூல்களை அடுக்கிவிடலாமா என்கின்ற எண்ணம் வருகிறது ,,,,
ஏப்ரல் -23 உலகப் புத்தக தினம் வருகிறது ஏதாவது வித்தியாசமாக ஏற்பாடு செய்யலாமா ... புத்தகக் காதலர்கள் பங்கேற்கும்படியாக ...? யோசிக்கவும் ..!

குங்கிலியக் காடு  ..உங்கள் பதிவுக்கு முன்னர் நான் அந்நூலை படிக்கவேண்டும் ...எங்கு கிடைக்கும் ? பெயரின் நறுமணமீ வாசிக்கத் தூண்டும் போலிருக்கிறதே ... கிடைக்க அல்லது படிக்க ஏற்பாடு நீங்கள்தான் செய்யவேண்டும் ...ஆவலுடன் காத்திருக்கிறேன் !
குறிப்பாக  உங்கள் பதிவின் நாயகர் இளங்கவி அருள் அவர்களின் இலக்கிய புலமைக்கு & அவரின் கொடைத்தன்மைக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ..அப்படியே தோழர் சுகிர்தராணி அவர்களின் பெருந்தன்மைக்கும் எனது பூங்கொத்துக்கள் !
நன்றி மைதீன் !
நானேதான் அண்ணா
நன்றி சாரதி
அரும்பு மீசைப் பருவத்தில் தலை நிறைய கேசம் ஒன்றும் ஆச்சரியமில்லை ...மஞ்சு ...அப்படி இருந்த நான் இப்படி ஆனதுதான் ஆச்சரியம் ...போயும் போயும் ஆண்டவன் என் கேசத்தின் மேல்தானா கண்வைக்க வேண்டும் ... ம்.. பழசை எண்ணி ...பெரு மூச்சு விடறது தவிர வேற வழியில்லை...



புதுவை ஓவியர்கள் முகாம் -2018

புதுவை ஓவியர்கள் முகாம் -2018




02-03-2018,& 14-13-2018 [சனி ஞாயிறு ] ஆகிய இரு நாட்களும் 

பாண்டிச்சேரி ,கடற்கரையில்,காந்தி சிலை அருகில் 
புதுவை ஓவியர்களின் ஓவிய முகாம் நடைபெற்றது .
புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறையினர்
ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது .
புதுவையின் பிரபல ஓவியர்கள் மற்றும் 
வளரும் கலைஞர்கள் பங்கேற்ற இந்நிகழ்வுக்கு 
பார்வையாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது . 
ஓவிய நண்பர் திரு சுகுமாரன் அவரகள் வெள்ளியன்றே 
அழைப்பு விடுத்தார் .
இருப்பினும் சனிக்கிழமை 
சென்னை பள்ளிக் கல்வி இயக்ககம் செல்லும் பணி . 
ஞாயிறு காலை 10 மணிக்கு நெய்வேலி 
குறள்  நெறிக்கழகம் நடத்திய 
திருக்குறள் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பு .
விழா நிறைவுக்குப் பின் புதுவை கிளம்பி 
முகாமை அடைய மாலை 4 மணியாகிவிட்டது .
அநேக ஓவியங்களை வரைந்து முடித்திருந்தார்கள் . 
ஒன்றிரண்டு ஓவியங்கள் மட்டுமே  
நிறைவு பெறும் நிலையில் .இருந்தன . 
நிறைவு நாள் என்பது வார இறுதிநாள் என்பதால் 
கடற்கரைக்கு வருகை தந்த பொதுமக்களும் , 
வெளிநாட்டுப் பயணிகளும் இக் கலை விருந்தை 
ரசித்து மகிழ்ந்ததைக் காண முடிந்தது .
ஒரு ஓவியக் கலைஞனுக்கு தனது கலைப் படைப்பு 
தன்  கண்ணெதிரே ரசிக்கப் படுவதையும் , 
அங்கீகரித்துப் பாராட்டப்  படுவதையும் 
தவிர்த்து வேறு என்ன வேண்டும் ..?
பல்வேறு ஓவியக்  கலைஞர்களின் படைப்புகளைக் 
கண்டு ரசித்த நான்அதன் பின்னர்  
ஓவியர்கள் சுகுமாரன் , ஷண்முகம்,சேகர்  கந்தப்பன் , அன்பழகன், வளரும் இளம் கலைஞர் செல்வி. செந்தூரிகை அன்பழகன் 
ரவி , கோபால் ,  ,காரைக்கால் முத்துக்குமார் ,ஜெய ஷங்கர் ,
பாரதியார் பல்கலைக் கூடத்தின் முதல்வர் திரு ........ 
பாரதியார் பல்கலைக் கூடத்தின் 
ஓவிய விரிவுரையாளர் திரு சுரேஷ் பரம்பத் 
உள்ளிட்ட பல ஓவியர்களையும் , 
கவிதாயினி கலா விசு அவர்களையும் 
கண்டு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது . 
மாலை 6.30 மணிக்கு மேல் நடைபெற்ற நிறைவு விழாவில் 
பங்கேற்ற ஓவியர்கள் அனைவருக்கும் 
பாராட்டுச் சான்றிதழ்களும் 
நினைவுக் கேடயங்களும் வழங்கப் பட்டன .

வாழ்த்துக்கள் ஓவியர்களே ...!

புதுவை ஓவியர்களின் கலைத்திறமையை அங்கீகரித்து பல்வேறு நிகழ்வுகளை வருடந்தோறும் நிகழ்த்தும் புதுவை அரசுக்கும் ,
கலைப் பண்பாட்டுத் துறைக்கும் 
பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதே நேரம் 
நமது தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறை இதுபோன்றே  
தமிழக ஓவியர்களின் திறமையை அங்கீகரிக்கும் 
பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தினால்தான் என்ன ...?
என்ற விழைவு வினாவையும் இங்கே வைக்கிறேன் ...!












 

Thursday, 1 March 2018

ராஜசேகரன் பரமேஸ்வரன் பாகம் - 2


                                    ராஜசேகரன் பரமேஸ்வரன் பாகம் - 2







கடந்த பதிவில் நம் ஓவியர்கள் சாதனை ஓவியரை வரைந்துகொண்டிருந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா ?

அதனைத்  தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளைக் ..கூறுகிறேன்.

மனோகரன் , பின்டோ ,தனபால் ஆகியோர்
அவரவர் கோணத்தில் பார்த்து வரைந்துகொண்டிருந்தார்கள்.
மறுபுறம் ராஜசேகரன் அய்யா அவர்கள்
தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார் ...
இந்த காட்சிகளையெல்லாம்
சந்தோஷ் மற்றும் கோகுல் இருவரும்
காமிராவால் சுட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இவ்வளவு நிகழ்வுகளையும் தியாகராஜன் அண்ணா
அமைதியாக ஒரு சாட்சி போல் நின்று
புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்  ...!


நானோ ஓவியரிடம் ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள்
குறித்தும் பல்வேறு தகவல்களை பேசிக் கொண்டிருந்தேன்.


இதற்கிடையில் ஓவிய நண்பர்கள் ஓவியரை ஓவியமாக்கி
அவரிடம் காட்டி மகிழ்ந்து ஆட்டோகிராஃப் வாங்கி கொண்டிருந்தார்கள் ..

இவ்வளவையும் பார்த்த பின்னர் எனது கரங்கள் மட்டும்
சும்மா இருக்குமா என்ன ?
நானும் ஒரு ஏ 4 தாளை எடுத்தேன் ...
கருப்பு நிற ஜெல் பேனாவைக் கொண்டு சர சர வென்று
கோடுகளை கிறுக்கத்தொடங்கினேன் ...
ஒரு சில நிமிடங்களில் முடித்து அவரிடம் காட்டினேன் ...
வியப்புடன் சிரித்தபடி கையெழுத்து இட்டுக்  கொடுத்தார் ...

அதே நேரம் மாணவர்கள் இருவரும் ஓவியருடன்
வண்ணப்படம் எடுத்துக்கொண்டார்கள் ..

மணியோ கிட்டத்தட்ட 8.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது ...
நேரம்போனதே தெரியவில்லை ...

பிறகு அவரிடம் நாங்கள் ஸ்வாசிகா இயக்கம்
பண்ருட்டியில் வருடம்தோறும் நடத்தும்
கோடைக் கால ஓவிய பயிற்சி முகாமில்
பங்கேற்று சிறப்பிக்க அழைப்பு விடுத்தேன்

இந்த வருடம் அல்ல ...2020-ல்
நடைபெற உள்ள ஸ்வாசிகாவின்
வெள்ளிவிழாக் கொண்டாட்ட ஓவியப்  பயிற்சி முகாமில்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெருமை சேர்க்க ...

புன்னகையுடன் ஆமோதித்தார் ...
எங்களுக்காக அவருடைய பொன்னான நேரத்தை
சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒதுக்கி
சித்திரக் கலை  தொடர்பான செய்திகளை ,அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அந்த மகத்தான ஓவியரிடமிருந்து
விடைபெற்று வெளியே வந்தோம் .
வாசல் வரை வந்து வழியனுப்ப வந்தவருடன்
கோகுலின் கேமரா கொண்டு மீண்டும் ஒருமுறை
குழுப் படங்கள் எடுத்துக்கொண்டோம் ...!

இப்படிப்பட்ட ஒரு கலை சந்திப்பு நிகழ வாய்ப்பளித்து
எங்களை அழைத்து வந்து அறிமுகப் படுத்தியதோடு
எங்கள் கலானுபவங்களை கண்டு ரசித்த
கலை ரசிகரான காஞ்சிபுரம் தியாக ராஜன் அண்ணாவுக்கும்
நன்றி தெரிவித்துக்கொண்டு ,
சந்தோஷிடமும் கோகுலிடமும் விடைபெற்று கிளம்பினோம்.

ராஜசேகரன் பரமேஸ்வரன் அவர்களுடைய கலைப் பயணம் தொடரட்டும் .

மேலும் பல சிறப்புகளை அவர் பெறவேண்டும் .



அவரைப் போன்ற கலை வித்தகர்களின்
ஜ்வாலை பட்டு மேலும் மேலும்
பல புதிய கலை தீபங்கள் ஏற்றப்பட்டு
கலையின் ஒளியால் இப்புவி முழுதும் நிரம்ப வேண்டும் ...!
இதைவிட எங்களுக்கெல்லாம் வேறு என்ன வேண்டும் ...?

இப்பதிவில் அவர் வரைந்துள்ள இன்னும்
சில ஓவியங்களை பகிர்ந்துள்ளேன்.

முழு துல்லியத்தையும் காண அவரது வலைத்தளம் செல்க ...
கண்ணுற்று மகிழ்க ...!


இன்னும் இவர் வரிசையில்

புகழ் பெற்ற ஓவியர்கள்
மணியம் செல்வன் , மாருதி ,ஜி .கே .மூர்த்தி ,
ராமு. ஜெயராஜ்,அமுதோன், உமாபதி,டிராஸ்கி மருது ,இளையராஜா , கார்ட்டூனிஸ்ட் மதன் ,நடிகர் சிவக்குமார் ,
பத்ம வாசன்,ஜமால் ,ஸ்யாம், ராஜராஜன் ,
சிற்பி ஜெயராமன்  உள்ளிட்டவர்களையும்
நேரில் சந்தித்து அவர்களுடன் குறைந்தது
இரு மணிநேரங்களாவது செலவிட்டு
அவர்களது சித்திரப் பயணம் குறித்து உரையாடி
தகவல்கள் நானும் அறியவேண்டும் ...
வருங்கால ஓவியர்களும் அறியும்வண்ணம்
பதிவிட வேண்டும் என்பது எனது ஆவல்  .

பார்ப்போம் ...ஆவல் நிறைவேறும் ...

ராஜசேகரன் பரமேஸ்வரன் சார் ...
எனக்கு இன்னும் ஒரு ஆவல் ..
நீங்கள் வரையும் நிகழ்வை நேரில் கண்டு
அது பற்றிய வர்ணனையை பதிவிடவும் ஆசை ...
நிறைவேற்றுவீர்களா ...?
வாய்ப்பு இருந்தால் தகவல் கொடுங்கள் ...
ஓடோடி வருகிறேன் ,,,

கலை இனிது
கலை இன்பம்
கலை முடிவிலி ...வாழ்வு சொற்பமே...!
கலையால் மட்டுமே இப்புவியில் அமைதி நிலவும் ...!

[குறிப்பு : இப்பதிவுகள் எல்லாமே எனது மனவண்ணங்கள் என்ற வலைப் பூவில் பதிவிடப்பட்டு பின்னர்தான் பகிர படுகின்றன ...இக்கட்டுரையினை மனவண்ணங்கள் வலைப்பூவிலும் கூட தடையின்றி படிக்கலாம் ]





















ராஜசேகரன் பரமேஸ்வரன் - பாகம் - 1


ராஜசேகரன் பரமேஸ்வரன் பாகம் - 1


அவனருளால் அவன் தாள் வணங்கி ...

சைவத்தில் ஊறித்  திளைத்தவர்க்கு இதன் பொருள் நன்றாய் விளங்கும் .
01-02-2018 அதாவது பிப்ரவரி முதல் நாள் - வியாழன் அன்று  அதன் எடுத்துக்காட்டாய் ஒரு நிகழ்வு ...
தியாகராஜன் என்னை அழைத்து சென்று பரமேஸ்வரனிடம் ஆற்றுப் படுத்திய நிகழ்வு ...!
அல்ல ... அல்ல ....  அறிமுகப் படுத்திய நிகழ்வு ...!
கலைச் சங்கமம்...
 கலைஞர்களின் சங்கமம் ...
தியாக ராஜன் ...திருவாரூர் தியாக ராஜன் அல்ல ...
காஞ்சிபுரம் தியாக ராஜன் ...!
முக நூல் நண்பர் .
பரமேஸ்வரன் ...கயிலாய பரமேஸ்வரன் அல்ல ...
ராஜசேகரன் பரமேஸ்வரன் ....
ஆகச் சிறந்த ஓவியர் .
தமிழ்நாட்டின் மார்த்தாண்டத்தில்  பிறந்து
(கன்னியாகுமரி மாவட்டம் -களியக்காவிளை )
மலையாள மண்ணில் வாழ்பவர் ....
இருமுறை கிண்ணஸ்  சாதனைகளை நிகழ்த்தியவர் .
லிம்கா சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்தவர் .
பெரிதினும் பெரிது கேள் என்றான் பாரதி ...
இவர் அதனை தன்  ஓவியங்களில் செய்து காட்டிக்கொண்டு இருக்கிறார்.
மிக மிகப் பெரிய பெரிய அளவுகளில்
பிரம்மாண்டமான ஓவியங்களை அனாயாசமாகத் தீட்டி
பார்ப்பவர்களை மலைக்கச் செய்பவர் ..
விருது பெற்ற  கலை இயக்குனர் .
நம் சம காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர் .
முக நூல் நண்பரும் கூட .

அப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞர்
சென்னை இலயோலா கல்லூரியில்
தங்கியிருப்பதாக தகவல் கூறினார் தியாக ராஜன் அண்ணா தொலைபேசியில்...
நாங்கள் அப்போது சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில்
புதிய  பாட நூல்  ஆக்க முகாமில் பணி  நிமித்தம் தங்கியிருந்தோம்.
வாய்ப்பை விடுவேனா என்ன ...?
 "அண்ணா ...இன்று மாலை 6 மணிக்கு மேல் நாங்கள் அவரை சென்று பார்க்க வாய்ப்பிருக்கிறதா?" என்று வினவினேன் ..அப்போது பகல் 12.30 .
 சற்றும் யோசிக்காமல் .."சரி .. நான் முதலில் அவரிடம் அனுமதி பெற்றுவிடுகிறேன் . கிடைத்தால் நானே அழைக்கிறேன்," என்றார்.
சரியாக 2 மணிக்கு அழைப்பு வந்தது . சரியாக ஆறு மணிக்கு லயோலா கல்லூரிக்கு வந்துவிடுங்கள் . என்றார் தியாக ராஜன் அண்ணா .
அவருக்கு நன்றி கூறிவிட்டு என்னுடன் எனது ஓவிய நண்பர்கள் இன்னும் மூவரையும் அழைத்து வருவதாகக் கூறினேன்.
சரி வாருங்கள் என்றார் .
முன்னதாக அந்த கல்லூரியில் விடுதியில் தங்கி இளங்கலை கணிதம் முதலாமாண்டு பயின்றுகொண்டிருக்கும் எனது மாணவன் சந்தோஷுக்கு தொலைபேசியில் தகவல் கூறினேன் .ஒரே கல்லில் இரண்டு மாங்காய் முடித்துவிடலாம் அல்லவா ?
ஓவியரையும் சந்திக்க முடியும் ..
எனது அன்பு மாணவனையும் பார்த்துவிடலாம் .
 நுங்கம் பாக்கத்தில் ஆட்டோ பிடித்து சக ஆசிரியர்கள் புதுக்கோட்டை தனபால்   மற்றும்  தேனி  மனோகரன் சகிதம் சரியாக 6 மணிக்கு கல்லூரி வாசலை  அடைந்தோம்.
சொல்லி வைத்தாற்போல் காஞ்சியாரும் வருகைதந்துவிட்டார் ...
உடன் வந்தவரை ஓவியர் பின்டோ என்று அறிமுகப் படுத்தினார் .
கரம் குலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டோம் .
இவர் தியாகராஜன் அண்ணாவை பல முறை வரைந்து
அதை அவர் தனது பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார் .

நாங்கள் காவலாளியிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தோம் .
விடுதி வளாகத்தை டையும் முன்னர் மாணவன் சந்தோஷும் எங்களுடன் இணைந்துகொள்ள அவனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினேன்.
பின்னர்  அனைவரும் ராஜசேகரன் பரமேஸ்வரன் அய்யா தங்கியிருந்த பகுதியை  அடைந் தோம் .

அறையின் கதவு திறந்தது ...ஓவியச் சாதனையாளர் முகம் தெரிந்தது .

எங்கள் வருகையை எதிர்பார்த்தாற்போல் அவர் வாசலுக்கே வந்து வரவேற்றார்.

நெடிய உருவம் ...உயரத்திற்கேற்ற உடல்வாகு .
மேல்நோக்கி அழுந்த வாரப்பட்டு போனி டெயிலாக்கப்பட்ட  தலை முடி .
முகத்தில் அடர்ந்த தாடியினூடே வெளிப்பட்ட குழந்தைத்தனமான சிரிப்பு ..சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் கண்கள் மூக்கு கண்ணாடியுடன் தெரிய ..
அடர் நீல நிற ( மயில் கழுத்துக்  கலர் ) ஜிப்பா என ஒரு ஓவியருக்கே உரிய எளிய தோற்றத்துடன் எங்களை கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து வரவேற்றார் அந்த சாதனை ஓவியர் .
நேரம் 6 மணியைத் தாண்டிய படியால் சூரிய ஒளி போவதற்கு முன் அவரை சந்தித்ததன் நினைவாக படங்கள் எடுத்துக்கொள்ள விரும்பி அவரிடம் தெரிவித்தோம் ( வரலாறு முக்கியமில்லையா பின்னே ...?)
செல்போனில் மாற்றி மாற்றி வேண்டிய வரைக்கும் க்ளிக்கித் தள்ளினோம் . பின்னர் எனது மனவண்ணங்கள் கவிதைத் தொகுப்பு நூலையும் நான் இயற்றிய மகாபாரதம் கவிதை நடை நூலையும் எனது அன்புப் பரிசாக ஓவியருக்கும் ,அண்ணாவுக்கும் அளித்து மகிழ்ந்தேன்.

பின்னர் எனது மாணவன் சந்தோஷையும் தனது காமிராவுடன் அங்கு வந்த சந்தோஷின் நண்பன் கோகுலையும்  [இவன் காட்சித் தொடர்பியல் ( அதாங்க ...விஷுவல் கம்யூனிகேஷன் ) இளங்கலை முதலாமாண்டு அதே கல்லூரியில் படித்துவருகின்றான் ]அவருக்கு அறிமுகப் படுத்தினேன்.

பின்னர் அறைக்குள் அனைவரையும் அழைத்துச் சென்றார் ஓவியர் .எங்களை அமர வைத்தார் .நாங்கள் அவரிடம் ஓவியக்  காலை தொடர்பாகவும் அவரது சாதனைகள் தொடர்பாகவும் உரையாடினோம் .

தனது கின்னஸ் சாதனைகள் குறித்த அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டார் .மேலும் தனது சமீபத்திய சாதனையான  ஏடாகூடம் பற்றியும்  அல்லாமல் அதன் மினியேச்சர் வடிவத்தையும் எங்களுக்கு காண்பித்தார் .

[ இது பற்றி தனி பதிவு போட வேண்டும் ...நேரம் இல்லாமையால்
 லிங்க்  கொடுத்துள்ளேன் ...ஆர்வமுடையவர்கள் லிங்கைக் கிளிக்குக ...விபரங்கள் அறிந்து மகிழ்க ]

 https://www.thebetterindia.com/126719/india-rubiks-cube-guinness-world-records/

https://en.wikipedia.org/wiki/Rajasekharan_Parameswaran#/media/File:Rajasekharan_Parameswaran-2016.jpg

https://www.facebook.com/rajasekharanp


எங்களுக்கு மிக  பிரமிப்பாக  இருந்தது .

அவர் வரையும் ஓவியங்கள் அத்தனையும் தத்ரூபமானவை .
பிரம்மாண்டமாய்   காட்சி தருபவை .
பென்சில் கொண்டு வெளிக் கோடுகள் ஏதும் வரைவதில்லை .
நேரடியாக வண்ணம் தீட்டுவது ...இவரது பாணி ...
அவரது ஓவியங்கள் அடங்கிய ஆல்பத்தினைக் காண்பித்தார் ...
அநேக ஓவியங்கள்  நான் முக நூலில்
அவரது பக்கத்தில் பார்த்து ரசித்தவை 
பிரம்மித்தவை
அவரது ஓவியங்கள் முன் கேமரா தோற்றுவிடுமோ
என்று நம்மை ஐய்யப்பட வைப்பவை ...
எனது நண்பர்களும் மாணவர்களும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .அது மட்டுமல்லாமல்
அவரது ஓவியங்கள் அட்டைப் படமாக
வெளியிடப் பட்டு  இருந்த சில வார, மாத இதழ்களையும் காண்பித்தார் .

இடைப் பட்ட நேரத்தில் ஓவியர் பின்டோ ஒரு புறமும்
 தனபால் ஒருபுறமும்  மனோகரன் ஒருபுறமும்
ராஜசேகரன் அய்யா அவர்களை சித்திரமாய் தம் பேனா மற்றும் பென்சில் கொண்டு கோட்டோவியங்களாக வரையத் துவங்கினர் .

                                                                                                           இன்னும் பகிர்வேன் ...