Sunday 29 May 2016

பாலர் பண்பு பயிற்சி முகாம்

       சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் ஸ்வாசிகா இயக்கம் இணைந்து நடத்தும் பாலர் பண்பு  பயிற்சி முகாம் 20-05-2016 முதல் நடைபெற்று வருகிறது. யோகா, சூரிய நமஸ்காரம்,இசை பாடல்கள் ,விளையாட்டுகள்,அறிவுக்கூர்மை பயிற்சிகள் ஆகியன  வல்லுனர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.தினந்தோறும் தம்பதி சமேதராக வருகை தந்து குத்துவிளக்கு ஏற்றி இந்நிகழ்வைத் துவங்கிவைப்பது இதன் சிறப்பு.இதன்  நிறைவு நாள் விழா நாளை 30-05-2016  திங்கள் அன்று புதுப்பேட்டை சரஸ்வதி வித்யாலயாவில் நடைபெறுகின்றது.பரிசுகளும் சான்றிதழ்களும் பங்கேற்றோருக்கு வழங்கப் பட உள்ளன.

Wednesday 4 May 2016

MAY ART CAMP

ஸ்வசிகாவின் ஓவியப் பயிற்சிமுகாம் 21 ஆம்  நடைபெற்று வருகிறது
மே 1 ஸ்வாசிகாவின் பிறந்தாநாளை முன்னிட்டு நாங்கள் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தும் ஓவியப் பயிற்சி முகாம்.
21 ஆம் ஆண்டில்...மே 1 முதல் மே 10 வரை ....
கோடையிலே கோலாகலக் கொண்டாட்டம் ....ராஜா ரவிவர்மாவின் திரு உருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
ஸ்வாசிகாவின் 21 ஆவது பிறந்தநாளை உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
முதல் நாள் 145 மாணவர்கள் பயிற்சி முகாமில் இணைந்தனர்
அனைவருக்கும் குறிப்பேடுகள்,பேனா,பென்சில் வழங்கப்பட்டன.
வயது வாரியாக மாணவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வண்ணம் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன,
ஓவிய அடிப்படைகளுடன் சித்திரப் பயிற்சி இனிதே துவங்கியது.
இன்று நான்காம் நாள் ...இது வரை 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பெற்று வருகிறார்கள்.
தொடர்ந்து 10 நாட்களும் நானும் இன்னும் பலநல்ல உள்ளம் கொண்ட சிறந்த ஓவியக் கலைஞர்களும் இணைந்து பயிற்சிகள் வழங்குகின்றோம்.
இம்முகாமில் பங்கேற்று தம் திறமையை பட்டை தீட்டி இன்று ஓவியக் கலையில் சிறந்துவிளங்கும் எங்கள் மாணவர்களும் எம்மோடு இணைந்து பயிற்சி அளிக்கிறார்கள்.
நிறைவு நாள் அன்று போட்டிகளும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய சித்திரக் கண்காட்சியும் நடைபெறுகின்றன .
மேலும் பயிற்சி அளித்த கலைஞர்களின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
அனைத்துக்கும் மேலாக முதுபெரும் ஓவியரும் இன்று கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது மாநிலம் முழுதும் பரவியுள்ள ஓவியர்களின் திறமைக்கு வித்திட்டவருமான ஓவியர் திரு ஹரிகிருஷ்ணன் (ஹரி ஆர்ட்ஸ் ) அவர்களுக்கு சித்திரக்கலா ரத்னா என்னும் பெருமைமிகு விருது வழங்கும் விழா நிகழ்வும் நடைபெற உள்ளது .
அனைவரும் வருகைதந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.