Thursday 8 September 2022

சாதனை மாணவர் விக்னேஷ்




இன்றைய பதிவின் கதாநாயகன் இவர்தான்.இவர் பெயர் P. விக்னேஷ். தற்பொழுது எங்கள் பள்ளியில் 12. ஆம் வகுப்பு படித்து வருகிறார். போர்ட்ரெய்ட், பென்சில் ஷேடிங் , கலர் பென்சில் ஷேடிங் என வெளுத்துக் கட்டுவார். குறிப்பாக  சுவரோவியங்களில் அதிக பங்களிப்பு உண்டு.

கடந்த வாரம் கூட புதுவையில் வெங்கட்டா நகர் பூங்காவில் சுவரோவியங்கள் வரைந்த குழுவில் இடம் பெற்றமைக்காக புதுச்சேரி அரசின் சபாநாயகர் கைகளால் பாராட்டும், பரிசும் பெற்றவர்.

மேலும் இவர் ஒரு சாரணரும் கூட .காந்திஜி சாரணர் படையின் படைத்தலைவராக இருந்து தன் படையை சிறப்பாக வழி நடத்தியவர். அத்துடன் சென்னையில் நடைபெற்ற கேம்ப்போரி 
எனும் பெருந்திரளணியில் கடலூர் மாவட்டத்தின் சார்பில்  பங்கேற்றபோது, என் வழிகாட்டலில், தன் திறமையின் காரணமாக கடலூர் மாவட்ட அணியானது மாநில அளவில் இரு முதல்  பரிசுகள் பெறக் காரணமாக இருந்தவர். மேலும் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான ராஜ்ய புரஸ்கார் விருது என்னும் பெருமை மிகு விருதுக்கும் தேர்வாகியுள்ளார்.

மேலும் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற Hues of Blue என்ற மூன்று நாள் ஓவியத்திருவிழாவில் பங்கேற்று பல்வேறு ஓவியப் பயிலரங்குகளில் கலந்துகொண்டதோடு, தன்னார்வலராகத் தொண்டு செய்து பாராட்டும், பரிசும் பெற்றவர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற இவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகிறீர்களா? இதோ அவரது தொடர்பு எண்:


6382 371 573

சாதனை மாணவர் குணசீலன்



இன்றைய பதிவின் நாயகன் , சாதனை மாணவர்  பெயர் K. குணசீலன்.எங்கள் பண்ருட்டி அரசுப் பள்ளியின் ஓவிய மாணவர். போர்ட்ரெய்ட் - குறிப்பாக Pencil Shading-ல் சமர்த்தார். படிக்கும்போதே ஒரு Proffessioal Artist போல மணமக்களை ஓவியமாக வரைந்து பொருள் ஈட்டியும் வருபவர். எங்களது பள்ளியின் தலைமையாசிரியரை தத்ரூபமாக வரைந்து அவருக்குப் பரிசளித்து, பாராட்டு பெற்றவர். பள்ளியின் சுவரோவியங்களிலும் பங்களிப்பு செய்தவர். ஒளிப்படக்கலையில் உள்ள ஆர்வத்தினால் கோடியக்கரையில் நடைபெற்ற ஒளிப்படக்கலைப் பயிற்சி முகாமில் என்னுடனும் தன் நண்பர்கள் ஹரிநாத், ரூபன் நாத் மற்றும் திருநந்தகுமாருடனும் பங்கேற்று பல்வேறு நுணுக்கங்களைக் கற்று திரும்பியிருக்கிறார்.

தற்போது 12-ஆம் வகுப்பு முடித்து ஓவியக் கல்லூரிக்கு விண்ணப்பித்து , புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தின் நுழைவுத்தேர்வில் மெரிட்-டில் தேர்வாகியுள்ளார். சென்னை ஓவியக் கல்லூரியின் நுழைவுத்தேர்வுக்காகக் காத்திருக்கிறார்.

இவரைப் பாராட்டிப் பேச :

7305285011

சாதனை மாணவர் திருநந்தகுமார்



இந்தப் பதிவின் கதாநாயகன்  N.திருநந்தகுமார். இவர் எங்கள் பள்ளியின் ஓவிய மாணவர் மட்டும் அல்ல. சிற்பியும் கூட. களிமண்ணில் சிலை செய்வதில் வல்லவர். இவரது தந்தையார் ஸ்தபதி என்பதால் இவருடைய ஜீனிலேயே
கலை ஊறியுள்ளது. அந்த 
காரணத்தினாலேயே எனது சிறப்பான வழிகாட்டலில் மிக எளிதாக மாநில 
அளவில் கலா உத்சவ் போட்டிகளில், காண்கலைப்பிரிவில் களிமண் சிற்பங்கள் செய்தலில் (3D Art). மாநில அளவில் முதலிடமும், அதன் காரணமாக தேசிய அளவில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் பெற்றவர். போர்ட்ரெய்ட் நன்கு வரைபவர்..வண்ணம் தீட்டுவதிலும் வல்லவர்.

கடந்த வருடம் 12 -ஆம் வகுப்பு நிறைவு செய்து தற்போது ஓவியக் கல்லுரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இப்படிப்பட்ட சிறப்புகள் பெற்ற இவரை வாழ்த்திப் பேச வேண்டுமா?

இதோ அவரது தொடர்பு எண் :

96773 64579





Wednesday 7 September 2022

சாதனை மாணவர் ஹரிநாத்

மாணவர் ஹரிநாத் பற்றிய பதிவு.


பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் அடுத்த சாதனை மாணவர்  E.அரிநாத். இவர் இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர். சிறந்த ஓவிய மாணவர். கலா உத்சவ் போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்று , மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றவர். .

இயற்கைக்காட்சிகள், வண்ண ஓவியங்கள் வரைவதில் சிறந்தவர். ஒளிப்படக்கலையில் photography (DSLR & Mobile ) சிறந்தவர்.. வீடியோ எடிட்டிங்கையும் ஒரு கை பார்த்து வருபவர். கடந்த வருடம் 12 ஆம் வகுப்பு நிறைவு செய்தவர்.இவரும் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.விஸ்காம் என்கின்ற விஷுவல் கம்யூனிகேஷன் பயில வேண்டும் என்பது இவரது தீராத ஆவல். 

தன் பள்ளியில் மூன்று வருடங்கள் தொடர்ந்து என் வழிகாட்டலில் தனிநபர் ஒளிப்படக் கண்காட்சியை நடத்தியவர்.

மேலும் இவர் சாரண மாணவரும் கூட. ஆறாம் வகுப்பில் தன் பள்ளியில் செயல்பட்டுவரும் சாரணர் படையில் இணைந்த இவர் 9 மற்றும் 10- ஆம் வகுப்பு பயிலும் காலகட்டத்தில் சாரணப் படைத்தலைவராக இருந்து சிறப்பாக வழிநடத்தியவர். மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான ராஜ்ய புரஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறார். 

அத்துடன் , ஹரிநாத் சென்னையில் - 2019 - ல் ஆகஸ்ட் இறுதியில் 5 நாட்கள் நடைபெற்ற கேம்போரி எனப்படும் சாரணப் பெருந்திரளணியில் ஒருங்கிணைந்த  கடலூர் மாவட்டம் சார்பாக சாரண ஆசிரியரான என தலைமையில் தன் அணியுடன் சென்று கலந்துகொண்டபோது  , அங்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, மாநில அளவில் இரண்டு முதல் பரிசுகளை வென்று கடலூர் மாவட்டத்தை சிறப்பிடம் பெற வைத்தார்.

சமீபத்தில் எனது தலைமையில், சக மாணவர்களான ரூபன் நாத் , குணசீலன், திருநந்தகுமார் ஆகியோருடன்  கோடியக்கரையில் நடைபெற்ற நான்கு நாள் ஒளிப்படப் பயிலரங்கில் ஹரிநாத்தும்  பங்குபெற்று பல்வேறு நுணுக்கங்களைக் கற்று தன்னை அப்டேட் செய்து கொண்டிருப்தோடு அங்கு நடந்த ஒளிப்படப் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று பாராட்டையும், பரிசையும் பெற்றிருக்கிறார்.

எனது வழிகாட்டுதலில் ஓவியம் , ஒளிப்படக்கலை, சாரணியம் என அனைத்திலும் திறம்பட விளங்குகின்றார்.தன் கலைத் திறமை மூலம், சாரணியத்தின்  மூலம் தன் ஆசிரியருக்கும் , பள்ளிக்கும் பெருமை சேர்த்து வரும் இவரை வாழ்த்துவோம்.

இப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்றிருக்கும் இவரை நீங்களும் வாழ்த்த வேண்டுமா?

இதோ அவரது இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாமே.

8270770583

சாதனை மாணவர் ரூபன்நாத்




சாதனை மாணவர் ரூபன் நாத்

இன்றைய தினப்பதிவில் இடம் பெறும் எனது  மாணவர் P.ரூபன் நாத்..இவரும் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்தான்.

சுயம்பு ஓவியரான இவர் எனது வழிகாட்டலில், செதுக்கலில் இப்போது இன்னும் மிளிர்கிறார்.

போர்ட்ரெய்ட் என்னும் மனித உருவங்கள் வரைவதில் படு சமர்த்தர். பென்சில் ட்ராயிங் எக்ஸ்பர்ட்... குறிப்பாக ஸ்டெட்லர், சார்க்கோல் வகைப் பென்சில்கள் மற்றும் கலர் பென்சில்கள் கொண்டு வரைவதில் மிளிர்ந்து வருகிறார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மட்டுமே பண்ருட்டி அரசுப் பள்ளியில் படிக்க முடிந்ததில் மிக வருத்தம் இவருக்கு. இன்னும் முன்னாள் இங்கு வந்து சேர்ந்திருந்தால் என்னிடம் இருந்து இன்னும் நிறைய நுட்பங்களைக் கற்றுக்கொண்டிருக்கலாமே என்கின்ற கவலைதான் அது.

தான் பள்ளியில் படிக்கும்போதே தனி நபர், மணமக்களின் படங்கள் , பிறந்தநாளுக்கான படங்கள் என வரைந்து குறைந்த அளவு கட்டணம் பெற்று சம்பாதிக்கவும் செய்துவருகிறார்.

மேலும் தன் மாமா ஒரு தொழில் முறை  ஃபோட்டோகிராஃபர் என்பதால் சிறு வயதிலேயே கேமராவைக் கையாளும் திறமையும் கைகூட , அத்துடன் ஃபோட்டோஷாப் எனும் கணினி வரைகலையிலும் சிறந்து விளங்குகிறார்.
சமீபத்தில் கூட எனது தலைமையில், சக மாணவர்களான ஹரிநாத், குணசீலன், திருநந்தகுமார் ஆகியோருடன்  கோடியக்கரையில் நடைபெற்ற நான்கு நாள் ஒளிப்படப் பயிலரங்கில் பங்குபெற்று பல்வேறு நுணுக்கங்களைக் கற்று தன்னை அப்டேட் செய்துகொண்டிருப்பதோடு அங்கு நடந்த ஒளிப்படப் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று பாராட்டையும், பரிசையும் பெற்றவர்.

இப்பொழுது ஓவியக் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருக்கிறார். நுழைவுத்தேர்வுகள் எழுதி முடிவுக்குக் காத்திருக்கிறார். சென்னை அல்லது புதுச்சேரியில் இடம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.


பி.கு: இதோ இந்தப் பதிவை நான் முடிக்கும் நேரத்தில் என் மற்றும் ஒரு ஓவிய மாணவரான ஹரிநாத் இடம் இருந்து ஒரு அழைப்பு தொலைபேசியில் ... BPK என்கின்ற பாரதியார் பல்கலைக்கூடத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு & நேர்காணலில் அவரது பள்ளி மாணவர்கள் மூவரும் மெரிட்டில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்களாம். அவர்களுள் இக்கட்டுரையின் நாயகன் ரூபன்நாத் தரவரிசைப்பட்டியலில் 5- ஆம் இடம் பிடித்திருக்கிறார்.

இதற்கும் சேர்த்து வாழ்த்துகள் ரூபன்நாத்

இப்படிப்பட்ட சிறப்புகளை வளரும்போதே பெற்றிருக்கின்ற ரூபன் நாத்தை வாழ்த்திப் பேச விருப்பமா?

இதோ அவரது தொடர்பு எண்: 

9943694384