Tuesday 31 December 2013

புத்தாண்டு சபதம்

           
            அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !

புத்தாண்டு என்றதும் நினைவுக்கு வருவது கேக் ,வாழ்த்துக்கள் ,

பார்ட்டி ,உற்சாக பானங்கள் ,கோவில் அர்ச்சனை ...இப்படி பல ...

இவற்றோடு இன்னொன்றும் வரிசையில் .இணைந்துகொள்ளும்

அது என்ன தெரியுமா?

புத்தாண்டு சபதம் .ஆம் ...!

புத்தாண்டு பிறக்கிறதோ இல்லையோ ...சபதம் எடுக்க தவறுவதில்லை

ஒவ்வொருவரும் .

ஆனால் சபதங்கள் அதனையும் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள்

போல காற்றிலே பறந்துவிடும் .

குடிகாரன் பேச்சு மட்டுமல்ல ...விடிஞ்சா போவது ...!

புத்தாண்டு சபதங்களும்கூட இரண்டாம் நாள் விடிந்தவுடனே போய்

விடுவதுதான் சோகம் .

சபதம் எடுப்பதில் காட்டும் வேகத்தை  நிறைவேற்றுவதில் காட்டுவதில்லை.

அதனால் நான் என்ன சொல்கிறேனென்றால் .....

இனிமேலாவது புத்தாண்டு அன்று எந்த சபதமும் எடுக்காமல்

நாமாகவே நல்ல விஷயங்களை நடைமுறைப் படுத்துவோம்

அல்லது செயல்படுவோம் என்று ஒரு சபதம் எடுத்துவிடுவோமா?
.
..ஐயோ ...ஐயோ ...யாரோ தொரத்திக்கிட்டு வராங்களே ... !
 happy new year !


Tuesday 24 December 2013

என்னைப் பற்றி நான்

என்னைப் பற்றி நான் .
நான் அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஒரு கலை ஆசிரியர் .
நூல்களை வாசிப்பதில் அதிக ஈடுபாடு உடையவன்.
புத்தகப் பிரியன்.இசைப் பிரியன் .
கலா ரசிகன்.
உண்பதில் ரசனை அதிகம் செலுத்துபவன்.
பயணங்களில் மனதைப் பறிகொடுப்பவன்.
இயற்கையில் மனதைக் கரைய விடுபவன்.
சாரண இயக்கத்தில் பற்றுடையவன் .
பிறருக்கு எப்போதுமே உதவிகள் செய்யும் மனநிலையை  இயற்கையிலேயே கொண்டவன்.
இவ்வலைப் பூ எனது சிந்தையில் தோன்றும் எண்ண அலைகளில் பூக்கும் பூக்களில் தொடுத்த நீண்ட சரம்...தொடர்ந்து மனம் பரப்பும் . 

நான் புதிதாக துவங்கியிருக்கும் இந்த வலைப்  பூ ...
என் மனதில் உருவாகிச்  சிதறும் எண்ணங்களை 
வண்ணங்களாய்க்  குழைத்து வாசம் வீசப் போகும் மலர் ...!
அனுபவங்களின் கிளைகளில்  ...
எண்ண ஓட்டங்களின் வேர்களில் பூக்கும் பூ ...!
தொடர்ந்து பூக்கும் நித்ய மல்லியாய் இல்லாமல் 
அவ்வப்போது மலரும் செண்பகமாய் மனம் வீசும் ...!
நுகரக் காத்திருங்கள் ...!