Wednesday 3 August 2016

சூழல் காப்போம்

கதிரோன் அனல் கக்கிக் காய்கின்ற 
வெய்யில் தாங்காமல் கடைசி நீர்துளியின்றி 
கண்மாய்கள் கூட வறண்டுவிட்டன ...
கண்ணீர்கூட வரமறுக்கின்றது வற்றிப்போய் ....
கதறல் ஒளி கூட தொண்டையோடு நின்று அடம் பிடிக்கின்றது....
கட்டறுந்துவந்த காளைக்கன்று 
கண்ணுக்கெட்டிய  வரையிலும் 
கழனியெங்கும் பசுமை காணாமல் பரிதவிக்கின்றது .
கள்ளிச்  செடிகள்கூட சருகுகளாய் சதைகள் வற்றிப்போய் 
கருத்து சுருண்டு முட்கள் கொண்டு முன்னுரை வாசிக்கின்றன ...
கட்டிய மனைவிக்கும் பெற்ற  மக்களுக்கும் 
கஞ்சி ஊற்றிக் கால்வயிறுகூட நிரப்பக் கூட 
கதியற்றுப்போன விவசாயிகள் விரக்தியில் வெறுத்துப்போய் ...
கயிறுகட்டித் தொங்கி உயிர் தொலைக்கின்றனர்....
கடைசி இலைகூட மிச்சம் வைக்காமல் உதிர்த்து கிளைகள் மட்டுமே                                                                                                         உள்ள பட்ட மரங்களில் 
கலாம் கண்ட வல்லரசுக்கனவு 
கலைந்துப்போய் காற்றில் கரைகிறது ...
கர்நாடகத்துக் குடகில் தலைக்காவிரி வழிந்து 
கரைபுரண்டு ஓடியதெல்லாம் வீணாய்ப் போன வெறுங்கதைகள்.... 
கவின்மலையாலாக் கேரளமும் தன் 
கரையனைத்துப் பாய்ந்த நீர் சென்ற வாடுமட்டும் தாங்கி ....
கங்கையும் யமுனையும் பிறந்து வரும் இமயத்துக்
கடும் பனிப் பாறைகளும்கூட உருகி உருக்குலைந்துபோய்  
கட்டுக் குலைந்துபோன கட்டழகியின் கிழட்டு உடம்பின்                                                                                                                                             சுருக்கங்களாய் 
கடும் வெடிப்புப் புரையோடிப்போகின்றது பூமியெங்கும் 
கடல்கூட வற்றிப்போய் வேற்று மணல் பாறைகள் மட்டுமே காட்சிக்கு விருந்தாய் ....
கண்ணெதிரே காணும் கானல் நீர் மட்டுமாவது நம்பிக்கை                                                                                                                                         அளிக்குமா என்ன 
காரிருள் எதிர்காலம் தொலைப்பதற்கு....?
கணவாய் மட்டும் ஒருவேளை இக்காட்சி இருந்துவிட்டால் 
கட்டாயம் வரும் நிம்மதி பெருமூச்சு ...
கனவுகள் நிஜமாகாது ...நீரும் பசுமையும் நீங்காது இந்நிலவுலகைச்                                                                                                                               சூழ்ந்திருக்க 
கரங்கள் கோர்ப்போம் ...நம் சூழல் காப்போம் ...!