Tuesday 14 November 2017

குழந்தைகள் தின விழா ஓவியக் கண்காட்சி

குழந்தைகள் தின விழா ஓவியக் கண்காட்சி

பண்ருட்டி அரசு மேல்நிலைப்

பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.இறை வணக்கக் கூட்டத்தில் நேருவின் திருவுருவப் படத்திற்கு   தலைமை ஆசிரியரால் மாலை  அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு பள்ளியில் இயங்கி வரும் ராஜா ரவி வர்மா  ஓவிய நுண்கலை மன்றம் சார்பில் பள்ளி அளவிலான ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.பெரும்பான்மையான மாணவர்கள் கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் திரு பூவராக மூர்த்தி அவர்கள் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.ஓவிய ஆசிரியர் முத்துக்  குமரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.என் எஸ் எஸ் அலுவலர் மோகன் குமார் , உதவி தலைமை ஆசிரியர் திருமதி கலைச்செல்வி ,ஆசிரியர்கள்  மணிவண்ணன் ,தணிகாசலம் , பேசில் ராஜ், மரிய அந்தோணி ,செந்தில் குமார் உள்ளிட்ட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இயற்கைக் காட்சிகள் ,கார்ட்டூன்கள் ,மனித உருவங்கள்,தெய்வங்கள்,தேசியத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,விழிப்புணர்வு ஓவியங்கள்,பல்வேறு டிசைன்கள், என கண்கவர் வண்ணங்களிலும் ,பென்சில் ஷேடிங் கொண்டும் ஓவியங்களை மாணவர்கள் தீட்டியிருந்தனர்.மேலும் களிமண்  கொண்டும்  பொம்மைகளை கலந்துகொண்ட உருவாக்கியிருந்தனர்.ஓவிய ஆசிரியர் முத்துக் குமரன் அவர்களின் ஓவியங்களும்  தனி அரங்கில் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன,பரிசு பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் ,பங்கேற்ப்புச் சான்றிதழ்களும் வரும் திங்கள் கிழமை இறைவணக்கக் கூட்டத்தில் வழங்கப்படும்.பரிசுகளை பள்ளியின் முன்னாள் மாணவர் ,கவின் கலைக் கல்லூரியில் பயின்று ஓவியத்  துறையில் பணியாற்றி வரும் சதீஷ் குமார் அவர்கள் வழங்கியுள்ளார்.நுண்கலை மன்ற மாணவர் செயலர் செல்வன்
விஷ்வா நன்றி கூறினார்.