Wednesday 7 September 2022

சாதனை மாணவர் ஹரிநாத்

மாணவர் ஹரிநாத் பற்றிய பதிவு.


பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் அடுத்த சாதனை மாணவர்  E.அரிநாத். இவர் இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர். சிறந்த ஓவிய மாணவர். கலா உத்சவ் போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்று , மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றவர். .

இயற்கைக்காட்சிகள், வண்ண ஓவியங்கள் வரைவதில் சிறந்தவர். ஒளிப்படக்கலையில் photography (DSLR & Mobile ) சிறந்தவர்.. வீடியோ எடிட்டிங்கையும் ஒரு கை பார்த்து வருபவர். கடந்த வருடம் 12 ஆம் வகுப்பு நிறைவு செய்தவர்.இவரும் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.விஸ்காம் என்கின்ற விஷுவல் கம்யூனிகேஷன் பயில வேண்டும் என்பது இவரது தீராத ஆவல். 

தன் பள்ளியில் மூன்று வருடங்கள் தொடர்ந்து என் வழிகாட்டலில் தனிநபர் ஒளிப்படக் கண்காட்சியை நடத்தியவர்.

மேலும் இவர் சாரண மாணவரும் கூட. ஆறாம் வகுப்பில் தன் பள்ளியில் செயல்பட்டுவரும் சாரணர் படையில் இணைந்த இவர் 9 மற்றும் 10- ஆம் வகுப்பு பயிலும் காலகட்டத்தில் சாரணப் படைத்தலைவராக இருந்து சிறப்பாக வழிநடத்தியவர். மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான ராஜ்ய புரஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறார். 

அத்துடன் , ஹரிநாத் சென்னையில் - 2019 - ல் ஆகஸ்ட் இறுதியில் 5 நாட்கள் நடைபெற்ற கேம்போரி எனப்படும் சாரணப் பெருந்திரளணியில் ஒருங்கிணைந்த  கடலூர் மாவட்டம் சார்பாக சாரண ஆசிரியரான என தலைமையில் தன் அணியுடன் சென்று கலந்துகொண்டபோது  , அங்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, மாநில அளவில் இரண்டு முதல் பரிசுகளை வென்று கடலூர் மாவட்டத்தை சிறப்பிடம் பெற வைத்தார்.

சமீபத்தில் எனது தலைமையில், சக மாணவர்களான ரூபன் நாத் , குணசீலன், திருநந்தகுமார் ஆகியோருடன்  கோடியக்கரையில் நடைபெற்ற நான்கு நாள் ஒளிப்படப் பயிலரங்கில் ஹரிநாத்தும்  பங்குபெற்று பல்வேறு நுணுக்கங்களைக் கற்று தன்னை அப்டேட் செய்து கொண்டிருப்தோடு அங்கு நடந்த ஒளிப்படப் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று பாராட்டையும், பரிசையும் பெற்றிருக்கிறார்.

எனது வழிகாட்டுதலில் ஓவியம் , ஒளிப்படக்கலை, சாரணியம் என அனைத்திலும் திறம்பட விளங்குகின்றார்.தன் கலைத் திறமை மூலம், சாரணியத்தின்  மூலம் தன் ஆசிரியருக்கும் , பள்ளிக்கும் பெருமை சேர்த்து வரும் இவரை வாழ்த்துவோம்.

இப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்றிருக்கும் இவரை நீங்களும் வாழ்த்த வேண்டுமா?

இதோ அவரது இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாமே.

8270770583

No comments:

Post a Comment