Tuesday 21 February 2017

கவிதைகணேசன் கருத்துக்கள்

பண்ருட்டி ரெயில்வே பாலம் சென்னைசாலை. நான் 1962 ல் 5 வயது பையனாக இருக்கும்போது எனது அம்மா ,இப்பாலத்திற்கு மண் பரிசோதனைக்காக மனிதர்கள் கைகளால் சுழற்றி போர்போட்டதை காண்பித்தார்கள். அதுதான் நான் பார்த்த முதல் போர்போட்ட காட்சி. அதன்பிறகு congress,DMK,ADMK,DMK, ADMK என்று மாறி மாறி ஆட்சிகள் வந்த போதெல்லாம் இப்பாலம் வந்தால் யார் பாதிப்பார்களோ அந்த வியாபாரிகள் பணம் கொடுத்து இதைக்கட்டாமல் பார்த்துக்கொண்டார்கள். கடைசியாக DMK ஆட்சியில் வேல்முருகன் MLA சட்ட சபையில் காரசாரமாகபேசி கலைஞர் பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் திட்டவரையரை கொடுத்தார். ஆட்சி மாறியபின் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் கோப்பு தூசு தட்டப்பட்டது. ஒருவழியாக நான் ரிட்டயர் ஆகி சீனியர்சிட்டிசன் ஆன பின் கட்ட ADMK காலத்தில் ஆரம்பித்தார்கள்.3 கலெக்டர் மாறிவிட்டார். நான்கு முதல்வர்கள் மாறி விட்டார்கள். வேலை ஒருவழியாக ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை கலெக்டர். முதல்வர் மாறு வார்கள்என்று தெரியாது.என்னுடைய ஆசையெல்லாம் நான் சிறுவனாக இரயில்வே லைனில் இந்த இடத்தில் இருந்து கிழக்கே பார்த்தால் திருவதிகை கோவில் தெரியும் . நேரே தெற்கே பார்த்தால் பனிக்கன்குப்பம் மேரிமாதா சர்ச் கோபுர விளக்கும் மேற்கே நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா கோபுரமும் தெரியும். இப்போது கட்டிடங்கள் மறைத்துவிட்டன. இப்பாலத்தில் போக்கு வரத்து ஆரம்பித்தபின் பாலத்தின் மீதேறி மீண்டும் ஒரே இடத்தில் இரயில்வே லைன் மீதிருந்து கிழக்கே திருவதிகை கோவில் கோபுரத்தையும் ,தெற்கே மாதாக்கோவில் கோபுரத்தையும், மேற்கே தர்க்கா கோபுரத்தையும் பார்க்கவேண்டும்..3 வருடமாக நாங்கள் படும் வேதனை ,பள்ளிப்பிள்ளைகள் படும் துயரம்.மார்க்கட்கடை வீதிக்கு மகளிர் செல்ல முடியாத சிரமம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. இதில் லாரியில் மண் கூழ் ஏற்றிசெல்லும் போது ஆடி ஆடி. போகிறவரை அபிஷேகம் செய்யும். மாட்டினவர்களில் நானும் ஒருவன். காண்ட்ராக்ட் காரன் சாமார்த்தியமாக சர்வீஸ் ரோடு போடாமல் தப்பித்துக்கொண்டான் எங்கள் இருசக்கர வாகனம் ஆட்டோ கார்கள்சேற்றில் மாட்டி அழிந்தது ஒருபக்கம்.விடிவு???. விரைவில்.😂!?!?கவிதைகணேசன். செல் 92 45 10 34 71


அரசுத் திட்டங்களின் மறுபெயர் ஆமை வேகத்த திட்டம் என்பது தாங்கள் அறிந்ததுதான் ....ஒன்று அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் ...இன்றைய அரசியல் சூழலில் போராட்டம் என்பது விரைவில் நீர்த்துப் போக வைக்கப்படும்.நம்மால் முடிந்தது அனைத்தையும் சகித்துக்கொண்டு ....நடைமுறை வாழ்க்கைக்கு நம்மை பழக்கப் படுத்திக்க கொண்டு (அதற்குத்தான் இந்த நாட்டில் நல்ல பயிற்சி அளிக்கப் படுகிறதே...!) இப்படியெல்லாம் முக நூல்,ட்விட்டர் ,வாட்ஸ் அப் போன்றவற்றில்  புலம்புவது மூலம் மனதை தேற்றிக்கொண்டு இருக்கலாம்....!


நடப்பதெல்லாம் நன்மைக்கே.... !
இதுவும் கடந்து போகும்....!
போலாம் ...ரைட்...!

No comments:

Post a Comment