Thursday 21 June 2018

பண்ணுருட்டி அரசுப் பள்ளி சாரணர்களுக்கு ஆளுநர் விருது

பண்ணுருட்டி அரசுப்  பள்ளி சாரணர்களுக்கு ஆளுநர் விருது 

            பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாரணர்களுக்கு ஆளுநர் விருது வழங்கப் பட்டது .சென்னை ஆளுநர் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முன்னிலையில் மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் இவ்விருதை கிருஷ்னேஸ்வரனுக்கு வழங்கினார் .கிருஷ்னேஸ்வரனுடன் அஜீத் குமார் ,அன்பரசன் ,ஹேமச்சந்திரன் ஆகிய சாரணர்களும் இவ்விருதை பெற்றுள்ளனர் .

         சாரணர் இயக்கம் ஒரு உலகளாவிய இயக்கமாகும். பாரத சாரண சாரணிய இயக்கத்தால் வருடந்தோறும் சிறந்த சாரணர்களுக்கு வழங்கப்படும் மாநில அளவில் மிக உயர்ந்த விருதுதான் ராஜ்யபுரஸ்கார் விருது என அழைக்கப்படும் ஆளுநர் விருது .ஒரு மாணவர் சாரணராக இணைந்து மூன்று வருடங்களில் பல படிநிலைகளைக் கடந்து , பல்வேறு சமுதாய நல சேவைகளை புரிந்து திறமை காண் சின்னங்களையும் ,பல சிறப்புச் சின்னங்களையும் பெற வேண்டும் . அதன்பின்னர் நடைபெறும் சோதனைமுகாமில் முதலுதவி ,ஆக்கல்  கலை  , கூடாரம் அமைத்தல் ,அளவிடுதல்,வரைபடப் பயிற்சி மற்றும் எழுத்துத்தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்படுவார் .அவ்வகையில் பல் சாரணர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் ஒரு மாவட்டத்துக்கு நான்கு சாரணர்கள் நான்கு சாரணியர்கள் மட்டுமே ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவுக்கு  அழைக்கப் படுவார்கள் .இது வரையிலும் இவ்வாய்ப்பானது  பிரபலமான தனியார் பள்ளி அல்லது நிதி உதவி பெரும் பள்ளியின்  சாரணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.நமதுகடலூர் மாவட்டத்திலேயே .முதன்முறையாக ஒரு அரசுப்பள்ளிக்கு இம்முறை இந்த பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டது அந்த அடிப்படையில் கடந்த 14 -06 - 2018 ,வியாழக் கிழமை அன்று சென்னை ராஜபவனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக சாரண ஆசிரியர் முத்துக்குமரன் இப்பள்ளியின் சாரணர்கள் நால்வருடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கல்வியமைச்சர் மாண்பு மிகு செங்கோட்டையன் ,பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும்  மாநில முதன்மை ஆணையருமான உயர்திரு இளங்கோவன் ,மாநில சாரணத்   தலைவர் உயர்திரு மணி உள்ளிட்ட சாரணப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில்தான் மேதகு ஆளுநர்,பண்ணுருட்டி அரசுப் பள்ளி சாரணர் கிருஷ்னேஸ்வரனுக்கும் சிதம்பரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சாரணி கார்த்திகாவுக்கு ராஜ்யபுரஸ்கார் விருதினை வழங்கிப் பாராட்டினார் .

          பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாரணர்கள் வருடந்தோறும் இவ்விருதுகளை பெற்று வந்தபோதிலும் கூட ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.இவ்வாய்ப்பை வழங்கிய மாவட்ட சாரணச் செயலர் உயர்திரு செந்தில் குமார்,மூத்த சாரணப் பயிற்சியாளர் உயர்திரு இளையகுமார், பயிற்சி ஆணையர் உயர்திரு வேலாயுதம் ,அமைப்பு ஆணையர் செல்வி கயல்விழி உள்ளிட்ட அணைத்து மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு பண்ணுருட்டி பள்ளியின் சாரணர் படையை மிகச் சிறப்பாக செயல்படுத்தி பள்ளியின் செயல்பாடுகளை உலகறியச் செய்துவரும் சாரண ஆசிரியர் திரு முத்துக் குமாரனையும் பாராட்டுகிறோம்.மேலும் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த  சாரணர்களையும் வாழ்த்துகிறோம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர்திரு பூவராகமூர்த்தி கூறினார் .மேலும் துணைத் தலைமை ஆசிரியர்கள் திருமதி அமலி ,திருமதி கலைச்  செல்வி மற்றும்  அனைத்து ஆசிரியர்களும்  விருது பெற்ற சாரணர்களை வாழ்த்தினர் .

          இப்பள்ளியின் சாரண ஆசிரியர் முத்துக் குமரன் தனது சாரண சேவைகளுக்காக சர்வதேசவிருதான  மெசஞ்சர் ஆஃப்  பீஸ் என்ற விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. 


















         



No comments:

Post a Comment