Monday 15 April 2019

பரிதி பாவேந்தன்

 பரிதி பாவேந்தன்

புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து வந்த புரட்சிக் கவிஞராம்
            புதுக்கவிதை தந்த பாரதிக்கு தனை தாசன் என்றவராம்
மதுநிகர்த்த போதையூறும் கவிதை பலவும் தந்தவராம்
            மனமுழுதும் தமிழின் வாசம் நிறையும் குணத்தைக் கொண்டவராம்.

அழகின் சிரிப்பு இருண்ட வீடு பாண்டியன் பரிசு
            அன்பு குடும்ப விளக்கு எதிர்பாராமுத்த நூல்கள் தந்தவராம்
மழலைக்கேற்ற எளிய பாடல் பலவும் ஈந்தவராம்
            மறத் தமிழர் என்ற பெருமை எண்ணம் நெஞ்சில் கொண்டவராம்.

நறுக்கு மீசை கொண்டு பார்க்க எளிய தோற்றம் பெற்றவராம்
            நனி சிறந்த நல்ல பாடல்களால் தமிழுணர்வை  தந்தவராம்
முறுக்கு மீசை பாரதிக்கு மிகவும் பிடித்த சீடராம்
            முத்தமிழின் சிறப்பை மேலும் வளர்க்க தம் வாழ்வைத் தந்தவராம்

தமிழ் தனக்கு அமிழ்து என்ற பெயரைத் தந்தவராம்
            தமிழ்க் கடலில் மூழ்கி சங்கெடுத்து முழங்கச் சொன்னவராம்.
அமிழ்தின் சிறந்த தமிழை உயிரின் சிறந்த தென்றவராம்
            அன்னை தமிழின் இருளை போக்க வந்த பரிதி யொத்தவராம்

கவி ஆக்கம் : மாணவ நண்பன் - (முத்துக் குமரன்)

முகவரி :
கவிஞர். அ.முத்துக்குமரன் ,
கலையாசிரியர் ,
எண்: 13 , இரண்டாவது குறுக்குத்தெரு ,
பட்டுசாமி நகர்,
கோட்டலாம்பாக்கம் ,
புதுப்பேட்டை - அஞ்சல் ,
பண்ணுருட்டி - வட்டம்,
கடலூர் மாவட்டம்.
அ.கு. எண்: 607108.

தொடர்பு எண்:  9842618876
                                8608097188

மின்னஞ்சல் :bhuvanaamkn@gmail.com

No comments:

Post a Comment