Monday 22 September 2014

வல்லூறுகளை விரட்டுவோம்

எங்கள் பள்ளியிலே
வகுப்பெடுக்கும் சில வல்லூறுகளுக்கு 
வாய் சற்றே நீளம்தான்.
வகுப்பெடுப்பார்களோ தெரியாது ...ஆனால் .
வம்படிப்பார்கள் நன்றாய் 
அதனால் அனேகமாக ..
வழக்குரைகாதைகள் தினமும் நடக்கும் 
ஆசிரியர்கள் ஓய்வறையில் ...!
ஆனால் ,
தீர்ப்புகள் மட்டும் தள்ளிப் போகும் ...
காலவரையின்றி...!
நிறைகளைக் கூட்டி மாணவர்களை
மாண்புமிக்கவர்கள்ளக்குவதை மறந்துவிட்டு 
மற்றவர்களைக் குறை கூறிக்  குறை கூறியே 
களைத்துப் போகிறார்கள்....!
களைத்துப் போன வாய்கள் ...வகுப்பெடுப்பது  எப்படி ?
அங்கே இருவர் மட்டும் வாதிகள் 
ஏனையோர் பிரதிவாதிகள்...!
இருவாதிகளும் பாட்டுக்கொருபுலவன் 
பாரதியால் பாடப்பெற்றவர்கள் ..!
நெஞ்சில் உரமும இன்றி 
நேர்மைத் திறமும் இன்றி 
வஞ்சனை செய்யும் 
வாய்ச்  சொல் வீராங்கனைகள் !
துர்வாசருக்கும் ,விஸ்வாமித்திரருக்கும் 
பெண்வேடம் போட்டுப் பார்த்தால் 
பத்தும் பொருந்தும் மெத்தப் பொருத்தம்....!
வாங்குகிற ஊதியத்துக்கு வஞ்சனையே இல்லாமல் 
வகுப்பறையில் மாணவர்க்கு 
அள்ளி அள்ளிக்  கல்விதனை 
வாரி வாரி வழங்குகின்ற வள்ளல்களுக்கிடையேதான் 
வாய்க்கு வந்தபடியெல்லாம் வாய் கூசும் வார்த்தைகளால் 
வசைமாரி பொழிந்து நிதம் 
வளர்கின்ற பிஞ்சுமனம் 
வெம்பி வெம்பி வெதும்பும் வண்ணம் 
நஞ்சு மொழி பல கூறி நாணவைப்பர் ...!
ஆசான்கள் இனத்திற்கே 
அவப்பெயர்கள் பல் தந்து 
அத்துனைப் பேர் முகத்தையும் கோண வைப்பார் ...!
நற்பயிர்கள் வளர்கின்ற நஞ்சை நிலம் வயல்தன்னில் 
வசதியாக இதுபோல களைகள் பல வளர்வதனால் 
கேடு அந்தப் பயிர்களுக்கே ...! 
கலைகளெல்லாம் பிடுங்கிவிட்டால் 
கதிர்கள் பல நன்குதரும் 
பயிர் வளர்க்கும் நிலம்போல 
பள்ளிச் சூழல் மாறிவிடும் 
வாருங்கள் நாம் கரம் கோர்ப்போம் ...!
பள்ளிகளில் களை  எடுப்போம் 
அப்படி நாம் களை எடுத்தால் 
ஆசான்கள் தொழில் கொண்ட 
அவப் பெயரும் ஓடிவிடும்....!
மாணவர்கள் எடுக்கின்ற மதிப்பெண்ணும் கூடிவிடும் ...!
மதிப்பெண்கள் கூடிவிட்டால் 
மலையளவு வாய்ப்புகள் 
மாணவரைத் தேடிவரும் ...!
நல்வாய்ப்பு பல பெற்ற 
மாணவர்கள் நிறைந்த தேசம் 
நிச்சயமாய் ஒரு நாளில் வல்லரசாய் மாறிவிடும் ...!

No comments:

Post a Comment