Monday 5 March 2018

புதுவை ஓவியர்கள் முகாம் -2018

புதுவை ஓவியர்கள் முகாம் -2018




02-03-2018,& 14-13-2018 [சனி ஞாயிறு ] ஆகிய இரு நாட்களும் 

பாண்டிச்சேரி ,கடற்கரையில்,காந்தி சிலை அருகில் 
புதுவை ஓவியர்களின் ஓவிய முகாம் நடைபெற்றது .
புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறையினர்
ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது .
புதுவையின் பிரபல ஓவியர்கள் மற்றும் 
வளரும் கலைஞர்கள் பங்கேற்ற இந்நிகழ்வுக்கு 
பார்வையாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது . 
ஓவிய நண்பர் திரு சுகுமாரன் அவரகள் வெள்ளியன்றே 
அழைப்பு விடுத்தார் .
இருப்பினும் சனிக்கிழமை 
சென்னை பள்ளிக் கல்வி இயக்ககம் செல்லும் பணி . 
ஞாயிறு காலை 10 மணிக்கு நெய்வேலி 
குறள்  நெறிக்கழகம் நடத்திய 
திருக்குறள் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பு .
விழா நிறைவுக்குப் பின் புதுவை கிளம்பி 
முகாமை அடைய மாலை 4 மணியாகிவிட்டது .
அநேக ஓவியங்களை வரைந்து முடித்திருந்தார்கள் . 
ஒன்றிரண்டு ஓவியங்கள் மட்டுமே  
நிறைவு பெறும் நிலையில் .இருந்தன . 
நிறைவு நாள் என்பது வார இறுதிநாள் என்பதால் 
கடற்கரைக்கு வருகை தந்த பொதுமக்களும் , 
வெளிநாட்டுப் பயணிகளும் இக் கலை விருந்தை 
ரசித்து மகிழ்ந்ததைக் காண முடிந்தது .
ஒரு ஓவியக் கலைஞனுக்கு தனது கலைப் படைப்பு 
தன்  கண்ணெதிரே ரசிக்கப் படுவதையும் , 
அங்கீகரித்துப் பாராட்டப்  படுவதையும் 
தவிர்த்து வேறு என்ன வேண்டும் ..?
பல்வேறு ஓவியக்  கலைஞர்களின் படைப்புகளைக் 
கண்டு ரசித்த நான்அதன் பின்னர்  
ஓவியர்கள் சுகுமாரன் , ஷண்முகம்,சேகர்  கந்தப்பன் , அன்பழகன், வளரும் இளம் கலைஞர் செல்வி. செந்தூரிகை அன்பழகன் 
ரவி , கோபால் ,  ,காரைக்கால் முத்துக்குமார் ,ஜெய ஷங்கர் ,
பாரதியார் பல்கலைக் கூடத்தின் முதல்வர் திரு ........ 
பாரதியார் பல்கலைக் கூடத்தின் 
ஓவிய விரிவுரையாளர் திரு சுரேஷ் பரம்பத் 
உள்ளிட்ட பல ஓவியர்களையும் , 
கவிதாயினி கலா விசு அவர்களையும் 
கண்டு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது . 
மாலை 6.30 மணிக்கு மேல் நடைபெற்ற நிறைவு விழாவில் 
பங்கேற்ற ஓவியர்கள் அனைவருக்கும் 
பாராட்டுச் சான்றிதழ்களும் 
நினைவுக் கேடயங்களும் வழங்கப் பட்டன .

வாழ்த்துக்கள் ஓவியர்களே ...!

புதுவை ஓவியர்களின் கலைத்திறமையை அங்கீகரித்து பல்வேறு நிகழ்வுகளை வருடந்தோறும் நிகழ்த்தும் புதுவை அரசுக்கும் ,
கலைப் பண்பாட்டுத் துறைக்கும் 
பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதே நேரம் 
நமது தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறை இதுபோன்றே  
தமிழக ஓவியர்களின் திறமையை அங்கீகரிக்கும் 
பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தினால்தான் என்ன ...?
என்ற விழைவு வினாவையும் இங்கே வைக்கிறேன் ...!












 

No comments:

Post a Comment