Tuesday 6 March 2018

உன்னில் நான் படித்த காலங்கள் என் கண்களில் நிழலாடுகின்றன .

அப்போது நீ புதுப்பேட்டை கடைவீதியில் v v பாஸ்கர் அவர்களின் இல்லத்திற்கு எதிரே ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கி கொண்டிருந்தாய் .

உனக்கு ஒரு பெயர் கூட உண்டு ..பொம்பள பள்ளிக் கூடம்

வைசியர் சத்திரத்தில் இயங்கி வந்த 
தொடக்கப் பள்ளி ஆம்பளை பள்ளிக் கூடம் ..
ஆம் ...அப்போது எல்லாருமே அப்படிதான் அழைத்தார்கள் 
இரு பள்ளிகளையும் ...!
இதுவரையிலும் அதன் காரணம் என்னவென்று எனக்கு விளங்கியதேயில்லை ...!

உன்னை நான் தாயாக உருவகிக்க 
நீ பொம்பளை பள்ளிக் கூடம் என்பதன் காரணமாகவும் இருக்கலாம் .

 

என்னை என் தந்தை முதன் முதலாய் சீருடை மாட்டி 

பள்ளிக்கு அழைத்து வந்த காட்சி என் கண்முன் விரிகிறது ...

பள்ளியில் சேர்க்கைக்கான தேங்காய் ,வெற்றிலை பாக்கு , 
வாழைப் பழம்  , பூ இவற்றோடு 
ஒரு பைசாவுக்கு  விற்குமே ..
ஆரஞ்சு சுளை மிட்டாய் அதில் ஒரு பாக்கெட் வாங்கி கொண்டு 
என் பிஞ்சு விரல்கள் பிடித்துக்கொண்டு 
ஆந்த ஓட்டுக்  கட்டிடத்தின் உள் நுழைந்து 
வெயில் வாங்கும் முற்றம் தாண்டி 
இன்னும் இன்னும் உள்ளே போய் 
கட்டிடத்தின் பின் கட்டின் வலப்புறம் உள்ள பகுதிக்கு செல்கின்றார் .

அங்கு ஒரு பெண் ஆசிரியர் வெள்ளையாய் முக்காடு போட்டபடி இருக்கிறார்
அவரை எல்லோரும் சாயபு டீச்சர் என்று அழைக்கிறார்கள்  .. 
சற்றே மெல்லிய ..கரிய நிற உருவம் ...என்னை  பார்த்து சிரித்தபடி தன்னருகில் அழைத்து அணைத்தபடி இருக்க ...
நானோ திமிறி அவரது பிடியினை  விடுவித்தபடி 
என் அப்பாவின் வெட்டி சுற்றிய கால்களை 
இறுக்கப் பற்றி பின் புறமாய் ஒளிந்துகொள்கிறேன் 
இதற்குள் தலைமை ஆசிரியர் ... 
அவர் ஒரு ஐயங்கார் அல்லது அய்யர் என்று நினைவு 
அவர் அப்பாவிடம் இருந்து பூஜை பொருட்களை வாங்கி 
அங்கிருந்த சாமி படத்தின் முன்பாக வைத்து படைக்கிறார் .
என்போலவே பள்ளியில் சேர வந்திருந்த 
இன்னும் சில என் வயது ஆண் ,பெண் பிள்ளைகளும் 
அழுதபடி ...கண் கலங்கிய படி நிற்க , எனக்கும் அவர்களுக்கும் ஆரத்தி காட்டி திரு நீறு இட்டு மிட்டாய்களை வழங்குகிறார் அவர் .
பின்னர் ,புதிய சிலேட்டு ,பலப்பம் ,
அரிச்சுவடி அட்டை ,ஆகியவற்றையும் 
புதிய பையில் போட்டு என்னிடம் அளிக்கிறார் அவர் .

புதிய அரிச்சுவடியை வெளியே எடுத்து முகர்கிறேன் நான் ...புதிய பெயின்டின் காகிதம் கலந்த  மணம்  வருடுகிறது .

கையில் உள்ள மிட்டாய்களில் இரண்டை வாயில் இட்டு சுவைக்கிறேன் .

மிட்டாய் வாயில் போனதுமே ஒரு மலர்ச்சி ...
என் முகத்தில் தென்பட்டிருக்க வேண்டும் ..
சாய்பு டீச்சர் என் தந்தையிடம் இருந்து என்னை வாகாக , 
மென்மையாக  தன்னருகில் இழுக்கிறார் 

என்னை மெதுவாக தன மடியில் இருத்தி 
பையில் இருக்கும் சிலேட்டை வெளியில் எடுக்கிறார் .
பலப்பம் கடினமாக இருக்கும் எனக் கருதியோ என்னவோ 
தன கையில் இருந்த சாக்பீஸை 
என் கையில் கொடுத்து பிடிக்கச்செய்து 
என் பிஞ்சு விரல்கள்  பிடித்து சிலேட்டில் -அட்டை சிலேட் அது -
ஒரு புறம் ஆனா ...என்று   கீச்சுக் குரலில் முழக்கியபடி 
என்னை பெரிதாக அ  எழுத வைக்கிறார் ..
ம்ம் ..என் கூடவே சொல்லு என்றபடி என்னையும் கூற சொல்கிறார் 
மில்லிய குரலில் சொல்கிறேன் ...ஆனா ....!
பின்னர் மீண்டும் மீண்டும்  கோட்டின் மேலேயே 
விரல்களை செலுத்தி பல அ க்களை கோட்டின்  மேல் கோடுகளாக எழுத வைக்கிறார் வைக்கிறார் ...பின்னர் 
  சிலேட்டின் பின்புறம்   திருப்பி 1 என்ற எண்ணை விரல் பிடித்து பெரிதாக எழுத வைக்கிறார் ...நானும் எழுத முதுகில் தட்டிக் கொடுத்து   



No comments:

Post a Comment