Thursday 1 March 2018

ராஜசேகரன் பரமேஸ்வரன் பாகம் - 2


                                    ராஜசேகரன் பரமேஸ்வரன் பாகம் - 2







கடந்த பதிவில் நம் ஓவியர்கள் சாதனை ஓவியரை வரைந்துகொண்டிருந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா ?

அதனைத்  தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளைக் ..கூறுகிறேன்.

மனோகரன் , பின்டோ ,தனபால் ஆகியோர்
அவரவர் கோணத்தில் பார்த்து வரைந்துகொண்டிருந்தார்கள்.
மறுபுறம் ராஜசேகரன் அய்யா அவர்கள்
தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார் ...
இந்த காட்சிகளையெல்லாம்
சந்தோஷ் மற்றும் கோகுல் இருவரும்
காமிராவால் சுட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இவ்வளவு நிகழ்வுகளையும் தியாகராஜன் அண்ணா
அமைதியாக ஒரு சாட்சி போல் நின்று
புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்  ...!


நானோ ஓவியரிடம் ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள்
குறித்தும் பல்வேறு தகவல்களை பேசிக் கொண்டிருந்தேன்.


இதற்கிடையில் ஓவிய நண்பர்கள் ஓவியரை ஓவியமாக்கி
அவரிடம் காட்டி மகிழ்ந்து ஆட்டோகிராஃப் வாங்கி கொண்டிருந்தார்கள் ..

இவ்வளவையும் பார்த்த பின்னர் எனது கரங்கள் மட்டும்
சும்மா இருக்குமா என்ன ?
நானும் ஒரு ஏ 4 தாளை எடுத்தேன் ...
கருப்பு நிற ஜெல் பேனாவைக் கொண்டு சர சர வென்று
கோடுகளை கிறுக்கத்தொடங்கினேன் ...
ஒரு சில நிமிடங்களில் முடித்து அவரிடம் காட்டினேன் ...
வியப்புடன் சிரித்தபடி கையெழுத்து இட்டுக்  கொடுத்தார் ...

அதே நேரம் மாணவர்கள் இருவரும் ஓவியருடன்
வண்ணப்படம் எடுத்துக்கொண்டார்கள் ..

மணியோ கிட்டத்தட்ட 8.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது ...
நேரம்போனதே தெரியவில்லை ...

பிறகு அவரிடம் நாங்கள் ஸ்வாசிகா இயக்கம்
பண்ருட்டியில் வருடம்தோறும் நடத்தும்
கோடைக் கால ஓவிய பயிற்சி முகாமில்
பங்கேற்று சிறப்பிக்க அழைப்பு விடுத்தேன்

இந்த வருடம் அல்ல ...2020-ல்
நடைபெற உள்ள ஸ்வாசிகாவின்
வெள்ளிவிழாக் கொண்டாட்ட ஓவியப்  பயிற்சி முகாமில்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெருமை சேர்க்க ...

புன்னகையுடன் ஆமோதித்தார் ...
எங்களுக்காக அவருடைய பொன்னான நேரத்தை
சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒதுக்கி
சித்திரக் கலை  தொடர்பான செய்திகளை ,அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அந்த மகத்தான ஓவியரிடமிருந்து
விடைபெற்று வெளியே வந்தோம் .
வாசல் வரை வந்து வழியனுப்ப வந்தவருடன்
கோகுலின் கேமரா கொண்டு மீண்டும் ஒருமுறை
குழுப் படங்கள் எடுத்துக்கொண்டோம் ...!

இப்படிப்பட்ட ஒரு கலை சந்திப்பு நிகழ வாய்ப்பளித்து
எங்களை அழைத்து வந்து அறிமுகப் படுத்தியதோடு
எங்கள் கலானுபவங்களை கண்டு ரசித்த
கலை ரசிகரான காஞ்சிபுரம் தியாக ராஜன் அண்ணாவுக்கும்
நன்றி தெரிவித்துக்கொண்டு ,
சந்தோஷிடமும் கோகுலிடமும் விடைபெற்று கிளம்பினோம்.

ராஜசேகரன் பரமேஸ்வரன் அவர்களுடைய கலைப் பயணம் தொடரட்டும் .

மேலும் பல சிறப்புகளை அவர் பெறவேண்டும் .



அவரைப் போன்ற கலை வித்தகர்களின்
ஜ்வாலை பட்டு மேலும் மேலும்
பல புதிய கலை தீபங்கள் ஏற்றப்பட்டு
கலையின் ஒளியால் இப்புவி முழுதும் நிரம்ப வேண்டும் ...!
இதைவிட எங்களுக்கெல்லாம் வேறு என்ன வேண்டும் ...?

இப்பதிவில் அவர் வரைந்துள்ள இன்னும்
சில ஓவியங்களை பகிர்ந்துள்ளேன்.

முழு துல்லியத்தையும் காண அவரது வலைத்தளம் செல்க ...
கண்ணுற்று மகிழ்க ...!


இன்னும் இவர் வரிசையில்

புகழ் பெற்ற ஓவியர்கள்
மணியம் செல்வன் , மாருதி ,ஜி .கே .மூர்த்தி ,
ராமு. ஜெயராஜ்,அமுதோன், உமாபதி,டிராஸ்கி மருது ,இளையராஜா , கார்ட்டூனிஸ்ட் மதன் ,நடிகர் சிவக்குமார் ,
பத்ம வாசன்,ஜமால் ,ஸ்யாம், ராஜராஜன் ,
சிற்பி ஜெயராமன்  உள்ளிட்டவர்களையும்
நேரில் சந்தித்து அவர்களுடன் குறைந்தது
இரு மணிநேரங்களாவது செலவிட்டு
அவர்களது சித்திரப் பயணம் குறித்து உரையாடி
தகவல்கள் நானும் அறியவேண்டும் ...
வருங்கால ஓவியர்களும் அறியும்வண்ணம்
பதிவிட வேண்டும் என்பது எனது ஆவல்  .

பார்ப்போம் ...ஆவல் நிறைவேறும் ...

ராஜசேகரன் பரமேஸ்வரன் சார் ...
எனக்கு இன்னும் ஒரு ஆவல் ..
நீங்கள் வரையும் நிகழ்வை நேரில் கண்டு
அது பற்றிய வர்ணனையை பதிவிடவும் ஆசை ...
நிறைவேற்றுவீர்களா ...?
வாய்ப்பு இருந்தால் தகவல் கொடுங்கள் ...
ஓடோடி வருகிறேன் ,,,

கலை இனிது
கலை இன்பம்
கலை முடிவிலி ...வாழ்வு சொற்பமே...!
கலையால் மட்டுமே இப்புவியில் அமைதி நிலவும் ...!

[குறிப்பு : இப்பதிவுகள் எல்லாமே எனது மனவண்ணங்கள் என்ற வலைப் பூவில் பதிவிடப்பட்டு பின்னர்தான் பகிர படுகின்றன ...இக்கட்டுரையினை மனவண்ணங்கள் வலைப்பூவிலும் கூட தடையின்றி படிக்கலாம் ]





















No comments:

Post a Comment