Thursday 1 March 2018

வானவில்

                                                                     வானவில் 





அழகு அழகு வானவில் 
அற்புத அழகு வானவில் 
எழுநிறம் கொண்டு இலங்கும் 
ஏகாந்த வான வில் 

காலை மேற்கு திசையிலே 
காட்சி தரும் வானவில் 
மாலை கிழக்கு திசையிலே
மாறித் தோன்றும் வானவில் 

இராமன் ஏந்தா வானவில் 
அர்ச்சுனன் கற்கா வானவில் 
இராமன் ஆய்ந்த வானவில் 
ஒளிச் சிதறலாலே  ஆனவில்

விப்ஜியாரு என்ற சொல்லும் 
விளங்க வைக்கும் வானவில் 
தப்பித் தவறிக் கூடவும் தன் 
நாணை  எற்றா  வானவில்

கண்ணுக் கழகாய்த் தோன்றிடும் 
கவின்மிகு வண்ண வானவில் 
கண்ணை மூடித் திறக்கையில் 
கலைந்து போகும் வானவில்    





No comments:

Post a Comment